நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 334 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்து தினங்களுக்கு பின், முட்டை விலை, நேற்று ஒரே நளில், ஐந்து காசு ஏற்றம் கண்டிருப்பது, பண்ணையாளர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 329 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, ஐந்து காசு ஏற்றம் கண்டு, 334 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.பத்து தினங்களுக்கு பின், முட்டை விலை மீண்டும் ஏற்றம் கண்டிருப்பது, கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்)
நிலவரம்:சென்னை, 339 காசு, பெங்களூரு, 330, மைசூரு, 325, ஹைதராபாத், 319, மும்பை, 351, விஜயவாடா, 322, கோல்கத்தா, 360, பார்வாலா, 339, டில்லி, 360 காசு.இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 38 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 71 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.