சேலம்: ஏற்காட்டில், மலர் கண்காட்சியுடன் இரண்டாம் பருவ குளிர்கால விழா நாளை துவங்குகிறது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில், ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கடைசி வாரத்தில், கோடைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். மலர் கண்காட்சி, காய்கறிகள் கண்காட்சி, நாய், குழந்தைகள் கண்காட்சியும் நடத்தப்படும்.ஏற்காடு மக்களை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறும். இந்த ஆண்டு, ஊட்டி, கொடைக்கானல் போன்று, இரண்டாம் பருவ விழாவை கொண்டாட, மாவட்டநிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.நாளை ஏற்காட்டில், இரண்டாம் பருவ குளிர்கால விழா கொண்டாடப்பட உள்ளது. கலெக்டர் மகரபூஷணம், விழாவை துவக்கி வைக்கிறார்.தப்பாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. மலர் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்ட பின், கலையரங்கில் பட்டிமன்றம், சினிமா பாடகர்களின் கச்சேரி நடக்கிறது. காலை, மாலை வேளைகளில், வாண வேடிக்கையும் உண்டு.குளிர்கால விழாவையொட்டி, சுற்றுலா பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.