மன்னார்குடி: தேசிய அடையாள அட்டை பதிவுக்கு வரிசையில் நிற்காமல், முந்தி சென்றதை தட்டிக்கேட்ட பெண் சத்துணவு அமைப்பாளர் கன்னத்தில் அறைந்த, அ.தி.மு.க., கவுன்சிலரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி, 29வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக சிங்காரவேலு, 48, உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாரதி மெட்ரிக்., பள்ளியில் தேசிய அடையாள அட்டையை அலுவலர்கள் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது, இதற்கான விண்ணப்பத்தை வழங்கவும், பெறவும் நீண்டவரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.ஆனால் அவர்களை கண்டுகொள்ளாமல், தனக்கு வேண்டியவர்களை உள்ளே அழைத்து சென்ற, 29வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சிங்காரவேலு, அவர்களின் பெயர்களை அடையாள அட்டைக்காக பதிவு செய்து கொண்டிருந்தார். இதனால் நீண்ட வரிசையில் நின்று, பொறுமையிழந்த அதே பகுதியைச் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர் சுசீலா, 54, என்பவர் தட்டிக்கேட்டார்.இந்நிலையில் மற்றவர்கள் முன், தன்னை தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் சிங்காரவேலு, யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறாய்? எனக்கூறி, சத்துணவு அமைப்பாளர் சுசீலாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சத்துணவு அமைப்பாளர் சுசீலா கொடுத்த புகாரின்படி, மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜகோபாலன் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அ.தி.மு.க., கவுன்சிலர் சிங்காரவேலுவை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.