Advertisement
மூதாட்டி கொலையான வழக்கு :வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

புதுக்கோட்டை: மூதாட்டியை கட்டையால் தாக்கி, அவர் அணிந்திருந்த, 5 பவுன் நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்த நச்சாந்துப்பட்டி வாஞ்சிநாதன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மீனாள் ஆச்சி, 80. கணவர் இறந்துவிட்ட நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த, 2011ம் ஆண்டு மார்ச் மாதம், 23ம் தேதி, இவரது வீட்டுக்குள் புகுந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமார், 27, திடீரென்று ரீப்பர் கட்டையால், மீனாள் ஆச்சியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் அணிந்திருந்த, 3 பவுன் மாலை, இரண்டு பவுன் காப்பு ஆகியவற்றை பறித்துவிட்டு சசிகுமார் தப்பிச் சென்றார். தலையில் பலத்த காயத்துடன் மயங்கிகிடந்த மீனாள் ஆச்சியை, உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் இறந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் போலீஸார், சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீதான வழக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாம்பசிவம், குற்றஞ்சாட்டப்பட்ட சசிகுமாருக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.