கும்பகோணம்: குடும்ப பிரச்சினையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டத் தகராறால், கர்ப்பிணி பெண் தன்னுடைய, ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் தீக்குளித்தார்.
கும்பகோணம் அருகே முழையூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன், 35. பால்வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், குத்தாலத்தை அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி, 29, என்பவருக்கும், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அனுசியா என்ற மகள் உள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுமதி, வீட்டிலிருந்து மண்ணெண்ணையை எடுத்து தன் மீதும், குழந்தை அனுசியா மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார்.இதைப்பார்த்து அவர்களை காப்பாற்ற சென்ற, கணவன் சாமிநாதனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மூவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீக்காயமடைந்த சுமதி தற்போது நான்குமாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.