பெரம்பலூர்: பிலிமிசை கல்லணை எமாபுரி கோவில் உண்டியலில், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், கல்லணை எமாபுரி கோவில் உள்ளது. கோவிலில் பூஜை செய்வதற்காக நேற்று காலை, 10 மணிக்கு, ÷காவில் பூசாரி செல்வேந்திரன், 45, கோவிலுக்கு சென்றார்.அப்போது கோவிலின் முன்புற கிரில் கேட்டிலிருந்த பூட்டும், கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர் சங்கர் சுந்தரேசன் மருவத்தூர் போலீஸில் கொடுத்த புகாரின்படி, மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.