all party meet on telgana today | தெலுங்கானா: இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்| Dinamalar

தெலுங்கானா: இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தெலுங்கனா குறித்த அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று டில்லியில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகிக்கிறார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கான தனி மாநிலம் அமைக்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன. தற்போதைய சூழ்நிலையில், வரும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன், ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடக்க இருப்பதால், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு தெலுங்கானா விவகாரத்தினை தற்போது கையில் எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்துக்கட்சிக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று டில்லியில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடக்கிறது. இதில் 8 கட்சிகள் பங்கேற்கின்றன. ஆந்திராவில் தற்போது புதிதாக உருவெடுத்துள்ள ஜெகன்மோகன்ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங். கட்சிக்கும் அழைப்புவிடுத்துள்ளது. இதனால் தெலுங்கானா குறித்து இன்று நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய அறிவுப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை