ராஞ்சி: ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக சிபுசோரன், சி.டி. காண்பித்து மிரட்டினால் அஞ்சமாட்டோம் என பா.ஜ.தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ,- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் கூ்டடணிஆட்சி நடக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இரு கட்சிகளும் முதல் 28 மாதங்கள் ஆட்சி செய்வது என ஒப்பந்தம் மேற்கொண்டன.இதில் பா.ஜ.வின் முதல்வராக அர்ஜூன் முண்டா உள்ளார். ஒப்பந்தப்படி கடந்த செப்டம்பர் 11-ம் தேதியுடன் முண்டா ஆட்சி முடிந்தது. எனினும் ஆட்சியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் (ஜெ.எம்.எம்.) ஒப்படைக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் சிபுசோரன் கடும் ஆத்திரத்தில் உள்ளார். இந்நிலையில் சிபுசோரன் , கூட்டணி ஒப்பந்தப்படி ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக சி.டி.ஒன்றினை உளளூர் டி.வி. சானல் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் காண்பித்து பா.ஜ.விற்கு கெடுவிதிப்பதாக அறிவித்தார்.இதற்கு பதிலடியாக பா.ஜ. , மாநில தலைவர் தினேஷ்ஆனந்த் கோஸ்சுவாமி கூறியதாவது:, சிபுசோரன் வைத்துள்ள சி.டி.எல்லாம் பழையது.இதை வைத்து எங்களை மிரட்டமுடியாது. மாநிலத்தில் பா.ஜ.விற்கு தான் செல்வாக்கு உள்ளது.எனவே அப்படி ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் விவகாரம் தொடர்பாக நாளை (29-ம் தேதி) ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடக்கிறது.இதில் ஆட்சி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இது குறித்து முதல்வர் அர்ஜூன்முண்டா கூறுகையில், எதுவாக இருந்தாலும் நாளை நடக்க உள்ள ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்தே கருத்து சொல்லமுடியும். அதுவரை ஆட்சி ஸ்திரமாகஉள்ளது என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.