சென்னையைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபர் எஸ்.சுகுமார், லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது தான் எடுத்த படங்களைக்கொண்டு ஒரு புகைப்பட கண்காட்சி வைத்துள்ளார்.
ஏற்கனவே சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி உள்பட, நூற்றுக்கணக்கான தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை படமெடுத்துள்ள இவரது கேமிராவில் பதிவாகாத பிரபலங்களே இல்லை எனலாம்.
ஒலிம்பிக்கில் எடுத்த 200 புகைப்படங்களை தொகுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுசில் புகைப்படக்கண்காட்சியாக வைத்துள்ளார்.
உதாரணத்திற்கு ஒரு விஷயம்....
பிறகு சுகுமார் ஒரு இடத்தை தேர்வு செய்து உசேன் போல்டை தான் விரும்பியபடி நேர்த்தியாய் பல படங்கள் எடுத்தார், அந்த படங்கள் யாவும் இந்த கண்காட்சியில் உள்ளது.
வெறும் விளையாட்டு மட்டுமின்றி விளையாட்டின் போது நடந்த சில சுவராசியங்களையும் அற்புதமாக பதிவு செய்துள்ளார், ஐயாயிரம் மீட்டர் ஒட்டத்தில் வெற்றி பெற்ற வீரர், அந்தவெற்றி களிப்புடன் ஒடிவந்து தனது அன்பு மகளிடம் கண்களால் சொல்லும் சந்தோஷச் செய்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தையும், பொதுமக்களுக்கு உவகையும் தரக்கூடிய இந்த படக்கண்காட்சிக்கு ஏற்பாடுகளை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் செய்துள்ளது. கண்காட்சி 29ம் தேதி தேதி வரை இந்த ஆர்ட் ஹவுசில் நடைபெறும், பின்னர் மைலாப்பூர் பாரதீய வித்யாபவன் அரங்கில் நடைபெறும். கண்காட்சி சம்பந்தமாக பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840208888.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.