இஸ்லாமாபாத் : 2013ம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குள் இந்தியாவிற்கு, அதிகம் விரும்பப்படும் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த அங்கீகாரம் இந்தியாவிற்கு கிடைக்கும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மெளசம் கான் தெரிவித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதிக்குள் இதற்கான பணிகளை நிறைவேற்றவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது முடியாதபட்சத்தில் ஜனவரி 31ம் தேதிக்குள் இப்பணி நிறைவு செய்ய பல்வேறு தரப்புகளிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முடிவு :
2013ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு அதிகம் விரும்பப்படும் நாட என்ற அந்தஸ்தை வழங்க பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான வர்த்தக ரீதியிலான பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக அனைத்து தரப்பிலும் சாதகம் மற்றும் பாதகங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்காக வர்த்தக ரீதியாக 1209 பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இருப்பினும் இந்தியாவிற்கு அதிகம் விரும்பப்படும் நாடு அந்தஸ்து வழங்குவதை தடை செய்ய பாகிஸ்தான் மீடியாக்கள் கடந்த சில வாரங்களாக வர்த்தக நலன்கள் குறித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆட்டோமெபைல், ஜவுளி, பாராமெடிக்கல் ஆகியதுறைகள் இந்தியாவுடன் ஏற்படுத்தும் வர்த்தக தாராளமயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வாறு வழங்கினால் பாகிஸ்தானின் வர்த்தக ஏகபோகங்கள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் திட்டம் :
இந்தியாவுடனான இந்த புதிய வர்த்தக உடன்படிக்கை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலை மனதில் வைத்தே செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிற்கு வழங்கப்படும் அதிகம் விரும்பப்படும் நாடு அந்தஸ்து, 2013ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் அமைக்கப்படும் புதிய அரசிற்கான தேர்தலில் கைகொடுக்கும் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் அரசு இத்தகைய முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாக்., பாலமாகும் காஷ்மீர்:
இந்தியாவிற்கு புதிய அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் அரசு முடிவ செய்திருக்கும் வேளையில் இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சை வலியுறுத்தும் விதமாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்பை ஏற்படுத்தும் பாலமாகவும் முதுகெலும்பாகவும் விளங்குவது காஷ்மீர் என தெரிவித்துள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி டில்லியில் நடைபெறும் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் நேற்று பேசிய நிதித்துறை இணையமைச்சர் அப்ஜூல் ரஹீம் ரதோர், இரு நாடுகளிடையே வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தவும், முதலீடுகளை அதிகரிப்பதால் ஏழ்மையை போக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டே உமர் அப்துல்லா அவ்வாறு தெரிவித்ததாக கூறியனார். மேலும் இரு நாடுகளிடையேயான அமைதி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளியே நட்புறவை ஏற்படுத்தவே 2012ல் விசா வழங்கியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாகிஸ்தானின் இந்த மாதிரி ஒரு நாடாக வேண்டி நாம் அலையக் கூடாது . அங்கே ஆயிரம் பிரச்சினைகள் அதை சமாளிக்கத்தான் இந்த மாதிரி அதிகம் விரும்பும் நாடு ,விரும்பாத நாடு பேச்செல்லாம் .இதற்கெல்லாம் நமது நாட்டுத் தலைவர்கள் இடம் கொடுக்கக் கூடாது .
நமது நாட்டுத் தலைவர்கள் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் , சமாஜ்வாடி,லால்லு.மாயா,நிதிஷ் இவர்களெல்லாம் ஓட்டை மட்டுமே குறியாக நினைப்பவர்கள் இதனால் , ஒட்டுக் கிடைக்குமென்றால் நமது நாட்டின் எல்லா கதவுகளையும் திறந்து வைத்துவிடத் தயாராய் இருப்பவர்கள்.
என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
நம் நாட்டின் மனிதன் மண் இவற்றை மதத்தின் பெயரால் பிரித்து இன்று வரை தீவிரவாதம் என்கிற ஒரு மதவாதத்தை அரங்கேற்றி இந்திய மண்ணில் பிரிவினை இந்தியா பாகிஸ்தானின் அரங்கேற்றம் தொடர்கிறது, இருப்பினும் மிகவும் வேண்டப்பட்ட நாடு என்பது இனி கிடைக்கும் இந்தியா ஏன் ஏங்குகிறது இதற்காக, நிச்சயமாக நாம் விருப்ப படவில்லை, இந்தியாவில் இருந்து மின்சாரம் நீர் முதலியவை கொடுக்க பட்டால் நிச்சயம் பாகிஸ்தான் கொடுக்கும் வாசகங்களை, சீனாவின் கை கூலியாக இருக்கும் பாகிஸ்தான் இலங்கை இந்தியாவுக்கு நிரந்தர ஆபத்து, நம் காஸ்மீர் மண்ணை சீனாவின் நடைபாதைக்கு கொடுத்த பாகிஸ்தான் நமக்கு விருப்ப பட்ட நாடா,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.