மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் நள்ளிரவில் தீ பிடித்து எரிந்தது. காலையில் தான் தீ விபத்து வெளியே தெரிய வந்ததால் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதனால் இந்த விபத்தில் சதிசெயல் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் மதுரையும் ஒன்றாக திகழ்கிறது. கோயில் நகரமான இங்கு சமீப காலமாக கிரானைட் முறைகேடு முக்கிய பிரச்னையாக இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. குறிப்பாக இவை அனைத்தும் வருவாய் துறை வசத்திற்குறியதால் இந்த துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தீ பிடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
காலையில் தான் தெரிந்தது:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது. பல ஏக்கர் கணக்கில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மெகா பழமை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் மாடியில் நிர்வாக அலுவலர் ஏ என்ற பிரிவு அலுவலகம் செயல்பபட்டு வருகிறது. இங்கு குறிப்பாக ஊழியர்களின் சர்வீஸ் தொடர்பான விஷயங்கள் இந்த அதிகாரியின் கட்டுக்குள் இருக்கும். மேலும் நிலப்பட்டா வழங்குதல் , கான்ட்ராக்ட் பணி தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவில் ஒரு மணியளிவில் திடீர் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் இந்த தீ எரிந்த விவரம் அதிகாலை 5 மணியளவில் தான் தெரியவந்தது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. நள்ளிரவில் பிடித்த தீயை காலை வரை யாருக்கும் தகவல் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
தீயை அணைத்தாலும் இங்கிருந்த முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் அலுவலர்கள் தொடர்பான விவரம் அழிந்து விட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய ஆவணங்களை அழிக்கும் நோக்கத்தில் யாரும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் துறை ரீதியான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேரில் சென்று தீ பிடித்த காரணம் குறித்து விசாரித்தார்.
சோகத்தில் அலுவலர்கள் ;
இங்கு அரசு அலுவலர்கள் குறிப்பாக தாசில்தார்களின் சர்வீஸ் பட்டியல் இங்கு அதிகம் இருந்ததாக தெரிகிறது. அலுவலர்ககளின் டிரான்ஸ்பர் , பதவி உயர்வு, அலுவலர்கள் மாற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் இருந்தன. இந்த ஆவணங்கள் அழிந்து இருப்பதால் தமது எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுமே என்ற சோகத்தில் அலுவலர்கள் மூழ்கியுள்ளனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இந்த கேசுக்கு வாய்தா வாங்காம இத்தோட முடிச்சுடலாம்.....இனி முன்னாள் இந்நாளுக்கு எந்நாளும் பிரச்சனையில்லை... மதுரைக்கு போகணுமுன்னா மன்னார்குடி வழியாக போலாம் மேலூர் வழியாக போகலாம் எதுக்கும் டீ கடை மாஸ்டர்கிட்டே கேட்ட தெளிவா விடை கிடைக்கும் அல்லது வடை கிடைக்கும்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சில வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சம்பவம் ஆம் மதுரை சம்பவம் .................. அதுவும் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அறையில் .....இந்த சம்பவம் .....மிகவும் சந்தேகேதிற்கு உரியது ... கிரனைடு மட்டும் இல்லை அலுவலர்களின் தன் பதிவேடு வும் ( 50 கு மேற்பட்ட ) .... ஒரு கேமரா இல்லை முதல் தல காவல் காரர் இல்லை ..... எல்லாம் அந்த மதுரை மீனாக்ஷி கே வெளிச்சம் ........... அலுவலர்களின் சங்கம் என்ன சொல்லுதுன்னு தெரியலையே
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.