புதுடில்லி: மருத்துவ மாணவியை கற்பழித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். டில்லியில் காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, டில்லியில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவிக்காக பிரார்த்தனை செய்கிறோம். குற்றவாளிகள் நீதி முன் கொண்டு வரப்பட்டு , தண்டனை வாங்கிதரப்படும் என கூறினார். இதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், மாணவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இப்பொழுது என்ன தண்டனை,சிகிச்சை கொடுத்தாலும் அது ஒன்றும் பயனில்லை.நடந்தது நடந்ததுதான். இதைபோல் இன்னும் எத்தனையோ சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் முழு பாதுகாப்பான சட்டம் நாட்டிற்கு தேவை. அதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். வெறும் கண் துடிப்பு பேச்சே வேண்டாம்,. வருமுன் காப்பவனே புத்திசாலி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.