பாட்டியாலா: பாட்டியாலாவில் இரண்டு பேரால் கற்பழிக்கப்பட்ட 17வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். பாட்டியாலாவில் கடந்த தீபாவளி அன்று இரண்டு பேரால் 17 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டார். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பயந்து போன அவர்கள், இரண்டு வாரம் சென்று போலீசில் புகார் கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் வழக்கை பதிவு செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம்பெண்ணின் சகோதரி கூறுகையில், போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததுடன், குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சமரசமாக செல்லவும் அல்லது அவர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதாகவும் கூறினார். ஒரு மாதமாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு, அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைதொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இரண்டு போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காவல்துறை சென்று புகாரளித்தும் பயனில்லை.., மாறாக காவல்துறை அதிகாரிகளே குற்றவாளிகளுக்கு துணை செல்கிறார்கள் என்றால் என்ன செய்வது.., உண்மையில் போராட்டம் செய்யப்படவேண்டிய இடம் இதுதான்... டெல்லி பெண்ணுக்கு குறைந்தது காவல்துறை நடவடிக்கையாவது எடுத்து வருகிறார்கள்... டெல்லி பெண்ணுக்காக போராடுபவர்கள் ஏன் இந்த பெண்ணுக்கு போராடவில்லை?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.