சென்னை: தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது என உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தேன். மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், இந்த மையத்தை அமைக்கக்கூடாது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மட்டும் கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசுகளுடன் சேர்ந்து தான் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை எடுக்க முடியும். மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு ஏற்கவில்லை என கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த அம்மா எப்பவுமே ஒரு தனி ரகம். தான் என்ற கர்வம் அதிகம். முதலமைச்சர்கள் மாநாடுகளிலும் , தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களிலும் முதலமைச்சர்கள் தங்களுடைய பேச்சுக்களை விரிவாக அச்சடித்து புத்தகமாக மேஜைகளில் முன்பாகவே வைத்து விடுவார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரம் வரையில் படிப்பார்கள். மீதமுள்ள பகுதிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வார்கள். அப்படித் தான் முதலமைச்சர்கள் மாநாட்டில் பழக்கம்.
ஆனால் இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார். முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும் நம்முடைய முதல் அமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
எல்லா முதல் அமைச்சர்களுக்கும் பத்து நிமிடம் என்று எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது. பத்து நிமிடம் முடிந்த பிறகு இதுபோன்ற கூட்டங்களில் பேசும்போது ஒரு அடையாள மணி அடிப்பார்கள். அவ்வாறு மணி அடித்தவுடன் பேச்சினை முடித்து விட வேண்டும் என்று கருதக் கூடாது. அதற்கு மேல் ஐந்து நிமிடம் இன்னும் சொல்லப் போனால் பத்து நிமிடம் கூட முதலமைச்சர்கள் பேசுவது உண்டு. நேரம் இருக்கிற வரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டு, பத்திரிகைகளுக்கு முழு பேச்சினையும் அளித்து விடலாம். இது தான் நடைமுறை. சும்மா இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது நல்லதல்ல.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.