சென்னை: சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பட்டங்களை அளித்து பேசிய ஜனாதிபதி: இந்திய கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியை வழங்க வேண்டும். உலகின் தலைசிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இது கவலை அளிக்கிறது. சர்வதேச அளவில் புகழ்மிக்கதாக இந்திய பல்கலை,, உருவாக வேண்டும். மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறையில் இன்னும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிற நாட்டுக் கல்வி முறைக்கும் நம் நாட்டுக் கல்வி முறைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு Theoritical Vs. Practical. மேலை நாட்டுக் கல்வி முறையில் Case Studies மிகவும் முக்கியமான ஒன்று. இப்படிப் பட்ட முறை இந்திய பல்கலைக் கழங்களில் அதிகமாக இல்லை. மேலும் 98% FINAL YEAR PROJECTS, ஏதாவது ப்ராஜெக்ட் சென்டரில் விலைக்கு வாங்கி தாங்கள் செய்ததாக submit செய்கிறார்கள். IEEE என்றால் என்ன என்றே தெரியாத மாணவர்கள் அதில் மிகப்பெரிய அளவில், மற்றும் சமீபத்திய (Current Title) project செய்ய கல்லூரி மற்றும் பேராசிரியர்களால் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இதற்கு இதில் அனைத்து தரப்பினர்க்கும் commission உண்டு. மாணவர்கள் வேறு வழி இல்லாமல் மெனு கார்டு பார்த்து பார்சல் ஆர்டர் செய்வது போல் விலைக்கு வாங்கி கல்லூரிகலில் சமர்ப்பிக்கிறார்கள். அதுவும் கல்லூரி முதல் VIVA VOCE செய்வதிலிருந்து, university வரை தெரிந்தே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அனைத்து தரப்பினருக்கும் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளுவது இல்லை. மாணவர்களும் பெற்றோர்களும் இதில் கிடைக்கும் மதிப்பெண்ணிற்காக பணம் செலவு செய்யத் தராக இருக்கிறார்கள். இந்த ப்ராஜெக்ட் சென்டர்கள் கல்லூரிகளலேயே நடத்தப்படுவது இன்னும் மிகப் பெரிய கொடுமை. நிலைமை இப்படி இருக்க 200 என்ன 500க்குள் வருவதே கடினம். சம்பத்தப் பட்டவர்கள் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்களா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.