புதுடில்லி: நீர் வளம் தொடர்பாக மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் எண்ணம் ஏதுமில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டில்லியில் 6வது தேசிய நீர்வள கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், நாளுக்கு நாள் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது. அதனை மேம்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறினார். மேலும் அவர், நிலத்தடி நீரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.