திருச்சி: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இன்று தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. திருச்சி மாநகரட்சி கூட்டம் இன்று நடந்தது. அப்போது அ.தி.மு.க., கோட்டத்தலைவர் சீனிவாசன், காவிரி நதிநீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் முதல்வருக்குநன்றி தெரிவித்தும், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும், இதற்காக மத்திய அரசு, மற்றும் மத்திய அரசில் இடம்பெற்றுள்ள கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம், மற்றும் தி.மு.க.,வினர் தீர்மானத்தை படிக்க விடாமல் தடுத்தார். இதனையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் மற்றொரு கோட்டத்தலைவரான மனோகரன், முத்துச்செல்வத்தை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துச்செல்வம் மைக் மற்றும் அறை கதவுகளை உடைத்து சேதப்படுத்தினார். இதன் பின்னர், முத்துச்செல்வம் ஒவ்வொரு கூட்டத்திலும் இவ்வாறு நடந்து கொள்கிறார். அடுத்த முறை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.