கற்பழிக்கப்பட்ட டில்லி மாணவியின் உடல் நிலை மோசமானது: மூளை- நுரையீரல் கடும் பாதிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிங்கப்பூர்: டில்லியில் மாணவ, மாணவிகள் நடத்திய கடும் போராட்டத்தினால் கற்பழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து மத்திய அரசு மாணவியின் உடல்நிலையில் முக்கிய கவனம் எடுத்து சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இங்கு அவரது உடல்நிலை படு மோசமாக இருப்பதாக அம்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் இவரையும் , இவருடன் இருந்த ஒரு ஆண் நண்பரையும் இந்த கும்பல் கொடூரமாக தாக்கி பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசியது. இதில் படுகாயமுற்ற அந்த மாணவிக்கு டில்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக டில்லி மாணவ அமைப்பினர் கடும் போராட்டம் நடத்தினர். ஜனாதிபதி மாளிகை முற்றுகை வரை சென்றது.இந்த சம்பவம் தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவில் விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பழிப்பு தண்டனை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தலைமை மருத்துவ அதிகாரி :

சில நாட்களாக கோமா நிலையில் இருந்த மாணவி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை படுமோசமானது. இதனையடுத்து இவரை சிங்கப்பூரில் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர், இங்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் மாணவியின் உடல் நிலை குறித்து கூறியிருப்பதாவது: மாணவிக்கு மூளை பகுதியில் காயம் இருப்பதாகவும், நுரையீரல் மற்றும் அடிவயிற்றுப்பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது படு மோசமான நிலையில் இருக்கிறது என்றும் இதனால் மாணவி தற்போது உயிருக்கு போராடி வருகிறார் என்றும் கூறியுள்ளனர். இதனை ஆஸ்பத்தரி தலைமை மருத்துவ அதிகாரி கெல்வின் லாக் நிருபர்களிடம் விளக்கினார்.

காங்., ஆண்டு விழா ரத்து:

இன்று காங்கிரஸ் 127 வது ஆண்டு விழா டில்லியில் நடப்பதாக இருந்தது. ஆனால் மாணவி கற்பழிப்பு விஷயத்தினால் காங்கிரஸ் பெரும் கவலை அடைந்திருப்பதாகவும் , இதனால் இந்த ஆண்டு விழாவை கொண்டாடவில்லை என்றும கட்சி தலைவர் சோனியா இன்று தெரிவித்தார். இதற்கிடையில் இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்: குற்றவாளிகள் யாரும் தப்பி விட முடியாது . விரைந்து நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனைக்குள்ளவார்கள் என்று கூறினார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (45)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sakthivel - Tiruppur,இந்தியா
29-டிச-201201:09:26 IST Report Abuse
Sakthivel இவர் டெல்லியில் இருக்கும் போது கடவுளால் கைவிடபட்டால் டெல்லி இந்திய தலைநகரம் ரணகளம் ஆகிவிடும். காங்கிரஸ் அரசின் அரசியல் விளையாட்டு இந்த சிங்கப்பூர் சிகிச்சை. டெல்லி மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவே இந்த நாடகம். தமது பதவியை தக்க வைத்துகொள்ள எதற்கும் தயங்காத குள்ளநரி கூட்டம்...ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம் இந்த சகோதரிக்காக......
Rate this:
Share this comment
Cancel
bhubala - Brussles  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201201:01:13 IST Report Abuse
bhubala நல்ல உள்ளங்களின் கூட்டு பிராத்னை நம் சகோதரிக்கு தேவை ஆதலால் பிராத்தனை செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
prasad - Chennai  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201200:27:45 IST Report Abuse
prasad சகோதரிக்கு ஒரு கடிதம் என்னை மன்னித்துவிடு உனக்கு நடந்த துன்பத்தை தடுக்க முடியாமல் போனதற்கு சகோதர பாசத்தை பற்றி தெரியாதவர்கள் சொல்வதோ பெண்கள் உடையில் குறையிருப்பதால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை உடையிலில்லை குறை பார்ப்பவரின் பார்வையில் தானென்று என் சகோதரியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கு தூக்கு தண்டனை போதாது உடல் உறுப்புகளை சிதைக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் இதை எழுதும் போது ஒன்று மட்டும் சொல்கிறேன் அந்த மிருகங்களை என்கையால் கொன்றுவிட்டு என் சகோதரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் ஆண்கள் சார்பாக இதை என் சகோதரிக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால் சொல்லுங்கள அவளிடம் கண்ணீருடன் ஒரு அண்ணன் கன்னியாகுமரியில் என்று
Rate this:
Share this comment
Cancel
zahir - chennai  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201200:14:19 IST Report Abuse
zahir எல்லாம் கடவுளின் நாட்டப் படியே நடக்கும் அப்பெண் விரைவில் குணமடைய பிரார்த்தி்க்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
dlce - madurai  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201200:02:12 IST Report Abuse
dlce sister come fast up.god is great.
Rate this:
Share this comment
Cancel
muhammed ishaq - ramanathapuram  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-201223:27:07 IST Report Abuse
muhammed ishaq i"m pray for god
Rate this:
Share this comment
Cancel
jebhasolomon - Chennai  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-201223:27:00 IST Report Abuse
jebhasolomon really god doing today great miracle in her.......life.
Rate this:
Share this comment
Cancel
J SENTHIL KUMAR - Singapore,சிங்கப்பூர்
28-டிச-201223:05:53 IST Report Abuse
J SENTHIL KUMAR I am from Singapore. She is really in very very critical condition. Few of the organs are not functioning well. She born in the wrong country. God bless her.
Rate this:
Share this comment
Cancel
Gobi Nathan - Erode,இந்தியா
28-டிச-201222:53:59 IST Report Abuse
Gobi Nathan உனது கனவும் லட்சியமும் ஈடேற நீ சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்..... இப்படிக்கு உனது சகோதரன்.......
Rate this:
Share this comment
Cancel
A.JAY GANESH MB - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
28-டிச-201222:41:14 IST Report Abuse
A.JAY GANESH MB கடவுளே இந்த சகோதரிய எப்படியாவது காப்பாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்