புதுடில்லி: வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. நேற்று மாலை வரை முடிந்த 24 மணி நேரத்தில் உ.பி.,யில் மட்டும் குளிருக்கு 30 பேர் பலியாகியுள்ளனர். அங்கு பல இடங்களில் வெப்பநிலை பூஜியத்துக்கும் கீழே சென்றது. பல இடங்களில் பனிமூட்டமாக உள்ளது. குளிர் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடு இல்லாதோர் மற்றும் ஏழை மக்களுக்கு கம்பளி வழங்க மாநில அரசு 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக பல மாவட்டங்களில் தற்போது தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. பீகாரில் பனிக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் பனிக்கு பீகாரில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். கயாவில் வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியசாக இருந்தது.
பஞ்சாபில் 3 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அம்ரீஸ்டரில் இருவரும் ஹோஜியார்பூரில் ஒருவரும் பலியாகியுள்ளனர். டில்லியில் வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியசாக இருந்தது. திரிபுராவில் பனிமூட்டம் காரணமாக டிரக் கவிழ்ந்ததால் 3 பேர் பலியானார்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.