மதுரை: மதுரையில் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேயே கட்ஜூ பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டில்லி கூட்டத்தில் முதல்வருக்கு நேரம் மறுக்கப்பட்டது தவறாகும். 10 நிமிடத்திற்கு பதில் 15 நிமிடங்கள் பேச வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அதற்கு மேல் சென்றால் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க கொடுத்திருக்கலாம். டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது மனவேதனை தரும் விஷயம் என கூறினார். முதல்வருக்கு மதுரை ஆதீனமும் ஆதரவு தெரிவித்துள்ளார்.