Advertisement
கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,19:29 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,19:48 IST

சென்னை:தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கை அருகே உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தின், தென் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், மற்றும், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பகல் முழுவதும், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில், லேசான சாரல் மழை பெய்தது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த, 48 மணி நேரத்தில், தமிழகத்தின், தென்கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், மழை பெய்யக்கூடும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான வடக்கு கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில், வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், தரைக்காற்று பலமாக வீசும்.இவ்வாறு, அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
kamarud - ooty,இந்தியா
29-டிச-201206:29:31 IST Report Abuse
kamarud மழையாவது நல்லா பெய்து கொஞ்சம் ஆறுதல் அளிக்கட்டும் .......மருத்துவ மாணவி மறைவால் எங்கள் நெஞ்சங்கள் கொதித்து போய் உள்ளன ..............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.