சென்னை: ரேஷன் கார்டுகளில், 2013 - 14 ம் ஆண்டுக்கு, பொருட்கள் வாங்க இணைக்கப்பட்ட உள்தாளில், அரசு நலத்திட்ட பெயர்களுக்கான கூடுதல் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.கடந்த, 2005 - 10ம் ஆண்டுக்கான ரேஷன் கார்டுகள், 2011, 12ல் புதுப்பிக்கப்படவில்லை; அவற்றில், உள்தாள்கள் இணைக்கப்பட்டன. மேலும், 2013 - 14 ம் ஆண்டிற்கும், மீண்டும், உள்தாள்கள் இணைத்து நீடிப்பதாக, அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக, உள்தாளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் என, பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால், 2013 - 14ம் ஆண்டுக்காக உள்தாளில், இலவச வேட்டி, சேலை, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், அரசு காப்பீடு திட்டம், கால்நடைகள், உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற நலத்திட்டங்களும், இடம் பெற்றுள்ளன. இத்தாள்கள், ஜன., 2ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.