கோவை : காந்திபுரம் பகுதியில், தினமும் இரவு தரமற்ற ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து, வெளியூர் செல்லும் பயணிகளை ஏமாற்றும் இடைத்தரகர்களின் நடவடிக்கையால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கோவை-சத்தி ரோட்டில் அமைந்துள்ளது ஆம்னி பஸ் ஸ்டாண்ட். கோவையில் இருந்து தினமும் சென்னை(30 பஸ்கள்), பெங்களூரு(20), நாகர்கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு(12), ராமநாதபுரம் மாவட்டம்(6), கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 12, ஐதராபாத்துக்கு நான்கு என, பல்வேறு வழித்தடங்களில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக,கோவையில் 32 ஆம்னி பஸ் முன்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ நாட்களில், ரயில்கள் மற்றும் அரசு பஸ்களில், டிக்கெட் முன்பதிவு விரைவில் முடிந்துவிடுவதால், பயணிகளுக்கு, ஆம்னி பஸ்கள் மட்டுமே மாற்று வழி என்ற நிலை உள்ளது.
காந்திபுரம் பகுதியிலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஸ்டாண்ட் மற்றும் தனியார் ஆம்னி பஸ் முன்பதிவு மையங்கள் முன், சில இடைத்தரகர்கள் தினமும் இரவில் நின்று கொண்டு, பயணிகளிடம், படுக்கை வசதி, குளிர்சாதன வசதி,வோல்வோ என, பல வகைப்படுத்தப்பட்ட பஸ்கள் குறித்து தெரிவித்து, முதலில் கூடுதல் கட்டணத்தை பெற்றுவிடுகின்றனர். பின், பயணிகளை, "தரமற்ற' சுற்றுலா பஸ்களை காட்டி, அதில் ஏற்றி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டு செயல்படுகின்றனர். இடைத்தரகர்களின் செயலால், தரமான ஆம்னி பஸ் என, நம்பி பணத்தை கொடுத்து ஏமாறும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கோவை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஸ்டீபன் கூறியதாவது:
எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், சத்தி ரோட்டிலுள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டிலிருந்துதான், பஸ்களை இயக்கி வருகின்றனர். சில மாதங்களாக எங்கள் சங்கத்தினர் பஸ்களை, முன்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்வதில்லை. பயணிகளை காந்திபுரம் பகுதியில் இருந்து, வேன், கார்களில் ஏற்றிக்கொண்டு, ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து குறிப்பிட்ட ஆம்னி பஸ்களில் அவர்களை ஏற்றி அனுப்பி வருகின்றோம்.
இடைத்தரகர்கள், வெளியூர்களில் இருந்து, சுற்றுலா பஸ்களை வாடகைக்கு கொண்டு வந்து, காந்திபுரம் பகுதியில் நிறுத்தி கொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர். இதனால், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்துக்கும் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னை தொடர்பாக, எங்கள் சங்கம் சார்பில், ஏற்கெனவே, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.பயணிகளின் அவஸ்த்தைக்கு காரணமான, இடைத்தரகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் ஒன்றுபட்ட கோரிக்கையாகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது முற்றிலும் உண்மையே... சில ஆம்னி பஸ் உரிமையாளர்களே அவர்களுக்கு வேண்டிய நபர்களை கூட்டி வந்து ப்ரோக்கேர்கலாக உருவாகி விடுகிறார்கள். இவ்வாறு இவர்களே செய்து விட்டு புகார்களும் குடுகிறார்கள் என்பது தான் வேடிக்கையாக உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தல் வரவிருக்கும் திருவிழாக்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.