கோவை : "தினமலர்' நாளிதழ் நடத்தும் பெண்களுக்கான, மார்கழி மாத கோலப் போட்டி, கொடிசியா "டி' ஹாலில் இன்று நடக்கிறது.
பெண்களின்
கோலத்திறமைக்கு மகுடம் சூட்டும் வகையில், "தினமலர்' நாளிதழ் சார்பில்,
ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதத்தில், கோலப்போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, அனைத்து மகளிரும், ஒரே இடத்தில் பங்கேற்கும் வகையில், இப்போட்டி
நடக்கிறது. இன்று காலை 8.00 முதல் மதியம் 12.00 மணி வரை, போட்டி
நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு, கோலம் போட, நான்குக்கு
நான்கு அடி இடம், ஒதுக்கப்
படும். அந்தப்பகுதியில் மட்டுமே கோலமிட வேண்டும்.
கோலமிடுவதற்கு
தேவையான பொருட்களை, பெண்களே எடுத்து வர வேண்டும். கோலமிட உதவிக்கு மட்டும்
ஒருவரை (பெண்) அழைத்து வரலாம். புள்ளிக் கோலம், ரங்கோலி கோலம், அத்தப்பூ
கோலம் என, தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கோலமிட, இரண்டு மணி நேரம் கால அவகாசம் தரப்படும்.
குறிப்பு: முன்பதிவு
செய்தவர்கள் மட்டுமே, போட்டியில் கலந்து கொள்ள முடியும். பெயின்ட் மற்றும்
சாணப் பொருட்களை பயன்படுத்தி, கோலம் போடக்கூடாது. போட்டியில் வெற்றி பெறும்
பெண்களுக்கு பரிசு மழை காத்திருக்கிறது. போட்டி நேரத்திற்கு முன்பே,
அரங்கிற்கு வந்துவிட வேண்டும். கோலப் போட்டி, "தினமலர்' நாளிதழ் மற்றும்,
சத்யா குழுமம் எலக்ட்ரானிக்ஸ், விஜய் பார்க் இன், பஞ்சாராஸ், யு "டிவி'
உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.