அன்னூர் : அன்னூர்
வட்டாரத்தில், 22 சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர் மற்றும்
உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் சத்துணவு வழங்கும் பணி
பாதிக்கப்பட்டுள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் அன்னூர், சொக்கம்பாளையம்,
ஆணையூர் ஆகிய இடங்களில் நான்கு மேல்நிலைப்பள்ளிகள், பெரியபுத்தூர்,
காட்டம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம், பொன்னே கவுண்டன்புதூரில்
உயர்நிலைப்பள்ளிகள், 17 நடுநிலைப்பள்ளிகள்
மற்றும் 71 தொடக்கப் பள்ளிகள் என 96
பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்
படுகின்றன.
இம்மையங்களில்
ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான 5,900 மாணவ, மாணவியர் சத்துணவு
சாப்பிடுகின்றனர். சில மாதங்களாக காலி பணியிடங்களால் மாணவர்களுக்கு
சத்துணவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.
அன்னூர் வட்டாரத்தில், அக்கரை
செங்கப்பள்ளி, அல்லப்பாளையம், கோனார்பாளையம், ஆம்போதி,
குமரகவுண்டன்புதூர், கணுவக்கரை, குப்பனூர், எல்லப்பாளையம், தாளத்துறை,
பெரியபுத்தூர், பட்டக்காரன்புதூர், ஆண்டிச்சிபாளையம், கரியாக்கவுண்டனூர்,
அன்னூர், ஆணையூர் ஆகிய 15 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் பல
மாதங்களாக காலியாக உள்ளது. இத்துடன், ஏழு பள்ளிகளில், சமையலர் பணியிடமும்,
மூன்று மையங்களில் உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால்
மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.