கோவை : "கோவை
ரயில்வே ஸ்டேஷனில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ
வழங்கப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகள் தேவைப்படும்போது கிடைப்பதில்லை' என,
பயணிகள் புகார் தெரிவித்தனர். கோவை ரயில்வே ஸ்டேஷனில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவ சாய்வு தளம், லிப்ட வசதி இல்லாத நிலையில், தனியார் அமைப்புகள் மற்றும்
மருத்துவமனை சார்பில், வழங்கப்பட்டுள்ள 27 மூன்று சக்கர நாற்காலிகள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.மூன்று சக்கர நாற்காலிகள் தேவைப்படும் போது கிடைப்பதில்லை என, பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் முகப்பு வாசல் பகுதியிலுள்ள தகவல் மையத்தின் அருகே, மூன்று சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
ஆனால்,
அவை தற்போது அங்கு இருப்பதில்லை. இதனால், முதியோர் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுவதாக, பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து,
ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் கூறுகையில், ""மூன்று சக்கர நாற்காலிகள்,
முதல் பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் பகுதியில், தகவல்
மையத்தின் கட்டுப்பாட்டில், சில நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே
ஸ்டேஷன் வளாகங்களில், பல்வேறு இடங்களில், மூன்று சக்கர நாற்காலிகளுக்கு,
யாரிடம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். ""கூட்ட நேரத்தில், யாராவது அதை வெளியே தள்
ளிக் கொண்டு சென்று விட்டால், கவனிக்க முடிவதில்லை. தேவைக்கேற்ப பயணிகளுக்கு, மூன்று சக்கர நாற்காலிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.