பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
துடியலூர்
அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் "ஹேண்ட் இன் ஹேண்ட்'
நிறுவனம் சார்பில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு
விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர்
கிருஷ்ணசாமி கொடிசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். கொண்டையம்பாளையம்
ஊராட்சி மன்ற உறுப்பினர் நாராயணசாமி, குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி சுப்பிரமணியம்
பாளையம் பிரிவு, வெள்ளக்
கிணறு
பிரிவு வழியாக, வி.ஜி.,மருத்துவமனை பஸ் ஸ்டாண்டில் நிறைவு அடைந்தது.
பேரணியில் பங்கேற்ற கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரி மாணவியர் சுற்றுச்
சூழல் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்த
னர்; மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.