Advertisement
சிதம்பரம் கோயிலில் திருவாதிரை திருவிழா
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 டிச
2012
22:59

சிதம்பரம்: நடராஜர் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு, நேற்று காலை, 5:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பகல், 1:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ராஜ வீதி புறப்பாடு நடந்தது. திரு ஆபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் நடனம் ஆடியவாறு, மாலை, 3:45 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகள் முன் தீர்த்த
வாரி நடைபெற்று, மகா தரிசனம் காட்சியருளினர். அப்போது மழையை பொருட்படுத்தாது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "ஓம் நமச்சிவாய... நடராஜா...' என, கோஷமிட்டு, தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சுவாமிக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு, 10:00 மணிக்கு திருவாதிரை மகா அபிஷேகமும், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகமும் நடந்தது. காலை, 7:00 மணிக்கு நடந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில், பக்தர்கள் கமலாயல குளத்தில் நீராடி, "ஆரூரா... தியாகேசா...' என, பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 27ம் தேதி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்ற பயன்படுத்திய திரியில் இருந்து தயாரிக்கப்படும் தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜருக்கு
சாத்தப்படும். நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நேற்று நடந்தன. பின், ஆயிரங்கால் மண்டபத்தில்
எழுந்தருளிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை செய்து, தீப மை, நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சாத்தப்பட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar Raja - Chennai,இந்தியா
29-டிச-201210:01:37 IST Report Abuse
Sekar Raja அரசின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோவில் வந்த பிறகும் கூட கோவிலின் வளர்சிக்கும் பராமரிப்புக்கும் அரசு எதுவுமே செய்யவில்லை. அருமையான கலையுடன் இருந்த பாண்டிய நாயகர் சன்னதியை இடித்துவிட்டு அப்படியே விட்டு விட்டார்கள். புகழ் பெற்ற கோவிலில் வந்த வரை லாபம் என்று அதிகாரிகள் நினைகிறார்கள் போலும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.