பதிவு செய்த நாள் :
கருத்துகள் (39)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:தமிழக தலைமைச் செயலரின் பதவிக் காலத்தை நீட்டிக்க, மத்திய உள்துறை மறுத்து விட்டதால், புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நிராகரிப்பு, மாநில அரசுடனான மோதல் போக்கை அதிகரித்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆட்சிகள் மாறும் போது, மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமானது தான்.

அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், கடந்தாண்டு மே, 16ம் தேதி, தலைமைச் செயலராக இருந்த மாலதியை மாற்றிவிட்டு, தேபேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம், கட்டாக் நகரைச் சேர்ந்த, தேபேந்திரநாத் சாரங்கி, 1977ல், இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் வருவாய், போக்குவரத்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட துறைகளில், முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர், இம்மாதம், 31ம் தேதி, பணி ஓய்வு பெறும் நிலையில், இவரது பணிக் காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் பதவி

உயர்வு பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், மாநில அரசின் பரிந்துரையை, மத்திய அர” தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று வெளியானது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியில், 1976ல் சேர்ந்தார். தமிழகத்தில் போக்குவரத்து துறை செயலர், அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்தாண்டு, டிசம்பர், 7ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலராக பொறுப்பேற்றார். தற்போது, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற, இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவரது கணவர் பாலகிருஷ்ணன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின்,கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர்.

டி.ஜி.பி., ராமானுஜத்தின் பதவிக்காலத்தை, இரண்டு

Advertisement

ஆண்டுகள் நீட்டிக்க, ஏற்கனவே தமிழக அர” பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால், தலைமைச் செயலர் பதவி நீட்டிப்பு விவகாரத்தில், மத்திய அரசுநிராகரித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிராகரிப்பு, மாநிலத்துடனான மோதல் போக்கை அதிகரித்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJHA GOPHALAN. S - Chennai,இந்தியா
31-டிச-201205:33:14 IST Report Abuse
RAJHA GOPHALAN. S அந்நிய சக்தியை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும் அது ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஒரே கடமையாக இருக்க வேண்டும் இப்போது விரட்டினல்தான் 2050 ஆம் ஆண்டிலாவது இந்திய வல்லரசு ஆக வாய்ப்பு உள்ளது நொந்து போன இந்திய பிரஜை ராஜகோபாலன்.ச
Rate this:
Share this comment
Cancel
MANJAL THUNDU MAINAR - alkhor,கத்தார்
29-டிச-201218:49:22 IST Report Abuse
MANJAL THUNDU MAINAR சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார் கருணாநிதி. வேலிக்கு சாட்சியாக ஓணான்.
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
29-டிச-201218:14:11 IST Report Abuse
itashokkumar நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
29-டிச-201214:00:20 IST Report Abuse
Ravichandran இந்திய முழுவதும் பதவி நீடிபுகளை ஒழிக்கவேண்டும். பதவி நீடிப்பு ஒரு மோசமான நிர்வாக முறை. மேலைநாடுகளில் அரசியல் தலைவர்கள் கூட அறுவதுக்கு மேல் ஓய்வுக்கு போய்விடுவார்கள். என்பது வயதானாலும் அரசியாலை விடாமல் பிடித்து தொங்கும் சில ஜென்மங்கள் நம்ம ஊரில்தான் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-டிச-201209:26:15 IST Report Abuse
Lion Drsekar சினிமா பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை நப்படது .....நடக்கும், நடந்ததும்..... நடந்தது,.... நடக்கப்போவதும் ......நடக்கப்போகிறது... ஆக நமக்கென்ன லாபம்...?? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
S.SANGEETHA - namakkal,இந்தியா
29-டிச-201209:23:53 IST Report Abuse
S.SANGEETHA இது சாதாரணவிசயம். மோதல் போக்கு என பெரிதுபடுத்த வேண்டாம் .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-டிச-201220:16:37 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை.......
Rate this:
Share this comment
Cancel
Panneer - chennai,இந்தியா
29-டிச-201207:46:13 IST Report Abuse
Panneer பதவி நீட்டிக்க அப்படி எதுவும் சாரங்கி சாதிக்கவில்லை.. அரசின் எந்த அதிகாரியும் திறமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளபோது பதவி நீடிப்பதால் பலன் எதுவும் கிடைக்க போவதில்லை . மொத்தத்தில் அதிகாரமில்லாத அதிகாரிகள் யார் வந்தாலும் எதையும் சாதிக்கபோவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-டிச-201207:44:27 IST Report Abuse
Lion Drsekar பதிவியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது எல்லோருக்குமே நடக்கும் ஒரு செயல்பாடுதான். மிகப் பெரிய பதிவி என்பதால் அவருக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் பதவி நீட்டிப்பு தந்தால் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எப்போதுதான் பதவி உயர்வு பெறுவார்கள்? கடை நிலை ஊழியர்கள் மிக மிக அருமையாக, எல்லோருக்கும் மிக விச்வசமாக நடக்கிறார் என்றார் அவருக்கும் பதவி உயர்வு தருவார்களா ஆள்பவர்கள்? ஆகா பதவி நீட்டிப்பு என்பதை முதலில் நிறுத்தவேண்டும், நேர்மையாக பணிபுரிபவர்கள், திறமையானவர்கள் என்றால் அரசு ஊழியர்கள் அனைவருக்குமே இந்த பணி நீட்டிப்புத் தரவேண்டும் முடியுமா? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Sanghimangi - Mumbai,இந்தியா
29-டிச-201215:09:39 IST Report Abuse
Sanghimangiபுத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மாட்டி கொள்ளாதிர்கள். திறமை வாய்ந்த ஒருவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து அவர் அனுபவங்களை நாட்டின் நலனிற்கு பயன்படுத்துவது மிகவும் அவசியம். அப்படித்தான் அப்துல் கலாம் அவர்களுக்கும் பதவி நீட்டிப்பு கொடுத்து நம் அறிவியல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினோம். அவருக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு அந்த தலைமை பதவி கிடைக்கவில்லை என்றாலும் சம்பள உயர்வுகள் தானாக வந்து விடும். அடுத்தவருக்கு பதவிகள் கிடைக்கவில்லை என்பதற்காக ஒவ்வொரு மாதமும் இஸ்ரோ தலைவரை மாற்ற முடியுமா? உதாரணமாக மயில்சாமி அய்யா அவர்களுக்கு தலைமை பதவி கொடுக்கவில்லை என்றாலும் அதற்கு இணையாக திட்ட தலைவர் பதவி உண்டு. அடுத்தவர்களுக்கு பாதிப்பு என்பதற்காக ஒரு திறமையானவரை இழக்க கூடாது. அதே சமயம் பதவி நீட்டிப்பில் உள்ள ஒருவரது பதவியை காலி பணியிடமாக அரசு கருதி அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் தவறேதும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-டிச-201207:42:07 IST Report Abuse
villupuram jeevithan இதைத் தான் முதல்வர் தனது பேச்சில் நாலாவது பத்தியில் குர்ப்பிட்டு உள்ளார்.: We, in Tamil Nadu, have been particularly hard hit by the attitude of the Government of India. Every single legitimate request of our State has been turned down or ignored and every initiative stymied.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
29-டிச-201207:34:57 IST Report Abuse
Pannadai Pandian இந்த ஷீலா பாலக்ருஷ்ணன் எந்த ஊருன்னு நல்லா பாருங்க. தமிழ்நாட்டுக்கு விசுவாசமாய் இருப்பதற்கு பதில் மத்திய அரசுக்கு விசுவாசமா இருப்பாங்க. இவுங்கள ஜெயா எப்படி ஹேண்டில் பண்ண போறாங்கன்னு தெரியில. மத்தியில ஒரு பெரிய மல்லு கோஷ்டியே இருக்கு தமிழகத்து காலை வார.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.