ஸ்ரீநகர்:நாட்டிலேயே, மிக நீளமான சுரங்க ரயில் பாதை, காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில், நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.காஷ்மீர் பள்ளத் தாக்கில் உள்ள, காஜிகண்ட் என்ற பகுதியையும், அங்குள்ள, பனிகால் என்ற நகரத்தையும், இணைக்கும் வகையில், ரயில் போக்குவரத்தை துவங்க, இந்திய ரயில்வே முடிவு செய்தது.
ஸ்ரீநகர்-ஜம்மு, தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி, கடும் பனிப் பொழிவால், போக்குவரத்து பாதிக்கப்படுவதால், இந்த ரயில் போக்குவரத்து, மாற்று வழித் தடமாக அமையும் என்பதால், இந்த திட்டம், தீவிரப்படுத்தப்பட்டது.காஜிகண்ட்டிலிருந்து, பனிகாலுக்கு, சாலை வழியாக செல்ல வேண்டுமெனில், 35 கி.மீ., பயணிக்க வேண்டும். ரயில் பாதை அமைக்கப்பட்டால், 17 கி.மீ., பயணித்தால் போதும்.
இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில், பிர் பஞ்சால் மலைத் தொடர் குறுக்கிடுவதால், அவற்றை குடைந்து, ரயில் பாதை அமைப்பது, சவாலான விஷயமாக இருந்தது.ஆனாலும், கடுமையாக முயற்சித்து, மலைகளை குடைந்து, சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை, என்ற பெருமை, இந்த வழித் தடத்துக்கு கிடைத்துள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம், நேற்று நடந்தது. சோதனை ஓட்டத்துக்காக, பனிகால் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது, ஏராளமான மக்கள் திரண்டு நின்று, வரவேற்பு அளித்தனர்.ரயில்வே வாரிய உறுப்பினர், ஏ.பி.மிஸ்ரா கூறியதாவது:இந்த வழித் தடத்தில், அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில், ரயில் போக்குவரத்து துவங்கும். ஆனாலும், காஷ்மீர் பள்ளத் தாக்கு பகுதிகளை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வழித் தடத்தை அமைக்கும் பணி, 2017ல், தான் முடிவடையும்.இவ்வாறு, ஏ.பி.மிஸ்ரா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.