காஞ்சிபுரம்:""இந்தியாவில் உயர்கல்வித் துறை வளர்ச்சி பெற, தனியார் பங்களிப்பு அவசி யம்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சென்னை, காட்டாங்கொளத் தூர், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 39 ஆய்வு மாணவர்கள் உட்பட, 8,812 பேருக்கு, பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள், குறைவான வசதிகளைப் பயன்படுத்தி, கடுமையான போட்டிகளுக்கிடையில், உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயர் கல்வியில் தரமானக் கல்வியை அளிப்பதில், தனியார் துறையின் பங்கும் முக்கியமானது.
வெளிநாடுகளில் உயர்கல்வித் துறையில், தனியார் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களான, ஹார்வேர்டு, யேல், ஸ்டான்போர்டு போன்றவை, தனியாரின் முயற்சியால் சிறந்து விளங்குகின்றன. ஆனால், இந்தியாவில் தனியார் பல்கலைக் கழங்கள், அந்த அளவிற்கு உயர முடியாததற்கான காரணம் தெரிய வில்லை.
பல்கலைக் கழகங்கள், லாப நோக்கில் இல்லாமல், தரமானக் கல்வியை மட்டும் மாணவர் களுக்கு அளிக்கிறோம் என்ற உணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தற்போது உயர்கல்வி வழங்கும் நடைமுறையை, கல்வி தரத்தை குறைக்காமல், மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம், அதிக அளவில் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
உயர்கல்வித் துறையில் விரிவான, சிறந்த கல்வி முறையை புகுத்த வேண்டும். இதில் வெளிப் படையான நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும்.மாணவர்களுக்கு கல்வி போதிக்க, தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும். தரமான ஆசிரியர்களால் மட்டுமே, தரமான கல்வியை வழங்க முடியும். சமுதாய வளர்ச்சிக்கு கல்வி அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைமை இயக்குனர் விஜயகுமார் சரஸ்வத், பிரபல மருத்துவரும், பி.ஆர்.ஜி. மருத்துவ காப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவருமான கோயல் ஆகியோருக்கு, மதிப்புறு அறிவியல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.பல்கலைக்கழக வேந்தர், பச்சமுத்து, தலைமை தாங்கினார். தமிழக கவர்னர், ரோசையா, முன்னிலை வகித்தார். துணைவேந்தர் பொன்னவைக்கோ, ஆண்டறிக்கை வாசித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.