Electronic Media Activity bad; pirint Media best: Digvijay Singh | எலக்ட்ரானிக் மீடியா செயல்பாடு மோசம் பிரின்ட் மீடியா அருமை: திக்விஜய் சிங்| Dinamalar

எலக்ட்ரானிக் மீடியா செயல்பாடு மோசம் பிரின்ட் மீடியா அருமை: திக்விஜய் சிங்

Added : டிச 28, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 எலக்ட்ரானிக் மீடியா செயல்பாடு மோசம் பிரின்ட் மீடியா அருமை: திக்விஜய் சிங்

போபால்:""எலக்ட்ரானிக் மீடியா, போலீசாகவும், வழக்கறிஞராகவும், தீர்ப்பு வழங்கும் நீதிபதியாகவும் விளங்குகின்றன. அவற்றை தவிர வேறு அமைப்புகள் எதுவுமே உயர்ந்ததில்லை என, எலக்ட்ரானிக் மீடியா நினைக்கிறது. ஆனால், பிரின்ட் மீடியா பொறுப்புடன் செயல்படுகிறது,'' என, காங்கிரஸ் பொது செயலர், திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அதை கண்டித்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, அதில் போலீஸ்காரர் பலியானது, அவர் இறந்ததற்கான காரணம் போன்ற விவகாரங்களை, எலக்ட்ரானிக் மீடியா எனப்படும், "டிவி'கள் வெகுவாக காட்டி, நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின.

இதுகுறித்து, திக்விஜய் சிங் நேற்று கூறியதாவது:டில்லியில், மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, எலக்ட்ரானிக் மீடியாக்கள், தங்கள் தகுதியை மீறி, காவல் காக்கும் போலீசாகவும், நீதியை ஆராயும் வழக்கறிஞர்களாகவும், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளாகவும் மாறிவிட்டன.

என்னை பொறுத்த வரை, நாமெல்லாம் வேஸ்ட்; ஒன்றுமில்லை. எலக்ட்ரானிக் மீடியா என்ன சொல்கிறதோ, அதை தான் நாடே கேட்க வேண்டும் என, அவை வலியுறுத்துகின்றன. ஆனால், பிரின்ட் மீடியாக்கள் எனப்படும் பத்திரிகைகள், பொறுப்புடன் செயல்படுகின்றன. எந்த விவகாரத்தையும், இப்படி அலசுவதில்லை. அவை, நிதான போக்கை கடைபிடிக்கின்றன. இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
29-டிச-201215:48:35 IST Report Abuse
தமிழ் குடிமகன் நீதி மன்றம் சொல்வதையே ஏற்றுக்கொள்ளாத மாநில அரசும் ,மத்திய அரசும் செய்ய தவறிய வேலையைத்தான் மீடியாக்கள் செய்கின்றன ,இதில் தவறொன்றும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Raju Ramasamy - Tirupur,இந்தியா
29-டிச-201215:44:09 IST Report Abuse
Raju Ramasamy வயது முதிர்ந்த பெரியோர்கள் பேசும் பேச்சு போல திக்கு வாய் விஜய் சிங்க்ஹு பேச வேண்டும். வடிவேல் மாதிரி காமெடி கீமிடி பண்ணக்கூடாது. காங்கிரஸில் இவரை போன்ற கிழங்களை (திவாரி என்ற பெண் பித்தன் போன்ற கிழங்கள் ) ஓரங்கட்டி காந்தி நினைத்த படி கட்சியை கலைத்து விட வேண்டும். அல்லது உண்மையான காந்தி காங்கிரஸ் இந்தியாவில் இருக்க வேண்டும். இப்படிக்கு - இந்தியன் .
Rate this:
Share this comment
Cancel
29-டிச-201212:38:32 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் மின்னணு ஊடகங்களால் நன்மையா கெடுதலா? நம்ம ஊர் பெரிய சானல் குரூப் ப்ளாக் மெயில் மூலம் சம்பாதிக்கிறது. உம்மைப்பற்றி தவறான காட்சிகளைக் காட்டிவிடுவோம் என சில சமயத் தலிவர்கள் ள், தொழிலதிபர்களிடம் பல கோடிக்கு பேரம் பேசுவது ரகசியமான செய்தியல்ல .சானல் மற்றும் கேபிள் டிவி உரிமையாளர்கள் ஆளும் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் யாரும் அவர்களை எதிர்த்துக் கொள்ளமுடியாமல் தவித்தனர் அவர்களை மீறி யாரும் தங்கள் படங்களின் சாட்டிலைட் உரிமையை விற்கவே முடியாது .அதுபோலவே அவர்களை விட அதிக நேயர் எண்ணிக்கை எதாவது ஒரு சானல் நிகழ்ச்சிக்குக் கிடைத்துவிட்டால் அவர்களது சானல் தெரியவிடாமல் இருட்டடிப்பு செய்யப்படும். அல்லது அந்நிகழச்சி நடத்தும் கலைஞர்களை தன பக்கம் இழுத்துவிடும் ஆனால் அதே நிறுவன பத்திரிக்கை சாதுபோல செய்திகளை வெளியிடும். இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
29-டிச-201210:30:11 IST Report Abuse
Nandu மீடியாக்கள் மசாலா திரைப்படங்கள் போல் செயல் படுகின்றன. கொஞ்சம் தமக்கு தேவையான நியாயம், தங்கள் கோணத்தில் கொஞ்சம் அரசியல், கொஞ்சம் விளையாட்டு (IPL போன்ற விளையாட்டே இல்லாத விளையாட்டுக்கெல்லாம் மிக முக்கியத்துவம்), கொஞ்சம் கவர்ச்சி (சில நேரங்களில் மிக அதிகமாக), கொஞ்சம் கோரம்... இப்படியாய் இருக்கின்றன நம் நாட்டு மீடியாக்கள். மீடியாக்கள் பாட புத்தங்களாக விளங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Global Citizen - சென்னை,இந்தியா
29-டிச-201210:17:24 IST Report Abuse
Global Citizen பாண்டிச்சேரியில் "நாராயணசாமி" மாதிரி மத்தியப் பிரதேசத்தில் "திக்விஜய்"... ரெண்டுபேரும் எதையாவது அப்பப்ப உளறிகிட்டே இருக்கவேண்டியது... "நாம என்ன சொல்லுகிறோம் என்பது முக்கியமில்லை, தினமும் செய்தியில் நம்ம பேர் இடம் பெறனும்" நல்ல பாலிசி....
Rate this:
Share this comment
Cancel
Hm Join - Chennai,இந்தியா
29-டிச-201210:01:16 IST Report Abuse
Hm Join சூப்பர் கண்டுபிடிப்பு........
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
29-டிச-201208:55:48 IST Report Abuse
Srinath ஏன் சொல்லாது இந்த லூசு இப்படி. பிரிண்ட் மீடியா என்றால் ஒரு முதலாளியின் சொல் மற்றும் இச்சைப் படி நடக்கும். அந்த முதலாளியை விலைக்கு வாங்கிவிட்டால் தனக்கு நற்சான்றிதழ் நினைத்தபடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மின்னணுத் துறை என்பது திறந்த வெளி அரங்கம் போன்றது. யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துக்களைப் பயமின்றித் தெரிவிக்கலாம். எல்லாருடைய விலாசங்களையும் வாங்கி அதன் பின்னர் விலைக்கு வாங்குவது இந்தத் தேசவிரோதிகளுக்கு இயலாத காரியம் என்ற சிறு உண்மையைக் கூடவா தமிழன் அறியமாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-டிச-201207:46:48 IST Report Abuse
Lion Drsekar இந்தப் ,,,,, கூறுவது உண்மைதான், காரணம் இவர்கள் உளறுவதை அப்படியே ஒளிபரப்புகிறார்கள் அல்லவா ? இதே பிரிண்ட் மீடியா என்றால் நான் கூறவில்லை என்று கூறி தப்பிதுக்கொள்ளலாமே . அதனால்தான் இப்படிக் கூறுகிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
29-டிச-201207:25:31 IST Report Abuse
Chenduraan பிரிண்ட் மீடியா உங்கள் கட்டுப்பாட்டின் இருக்கிறது எனவே கட்டுப்படுத்தலாம், உங்கள் கைபிள்ளையாக வைக்கலாம். ஏலேக்ட்ரோனிக் மீடியா உள்ளதை சொல்லும் அதனால் உங்களுக்கு பிடிக்கவில்லை. உங்களையெல்லாம் என்றைக்கு மாற்றுகிறோமோ அன்றைக்குத்தான் இந்தியாவுக்கு விடிவு காலம்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-டிச-201206:25:44 IST Report Abuse
villupuram jeevithan அதையும் அருமையாக்கி விடலாம் பதினாலுக்குள். கை வசம் தான் பல திட்டங்கள் இருக்கிறதே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை