CM Jayalalithaa's claim is not real: Karunanidhi | முதல்வர் கூறியது உண்மையான குற்றச்சாட்டு அல்ல: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கூறியது உண்மையான குற்றச்சாட்டு அல்ல: கருணாநிதி

Updated : டிச 29, 2012 | Added : டிச 28, 2012 | கருத்துகள் (110)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முதல்வர் கூறியது உண்மையான குற்றச்சாட்டு அல்ல: கருணாநிதி

சென்னை:"தமிழகத்திற்கு அவமானம் நேர்ந்து விட்டதாக, ஜெயலலிதா கூறுவது உண்மை யான குற்றச்சாட்டு அல்ல' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பத்து நிமிடத்திற்கு மேல் பேச வேண்டும் என, விரும்பியிருந்தால், முன்கூட்டியே தனக்குக் கூடுதலாக, நேரம் ஒதுக்கித் தர வேண்டுமென கேட்டிருக்கலாம்.அதை விடுத்து, பத்து நிமிடம் முடிந்து, மணி அடித்தவுடன், வெளியேறியுள்ளார். "பள்ளிகளில் மணி அடித்து, பிள்ளைகளை உட்கார வைப்பதைப் போல' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால், சட்டசபையில் மணி அடித்து, உட்கார வைப்பதும் பள்ளிகளில் மணி அடித்து, பிள்ளைகளை உட்கார வைப்பது போலத்தானா?தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம், 12வது ஐந்தாண்டுத் திட்ட வரைவை இறுதி செய்வதற்கான கூட்டம். அக்கூட்டத்தில், என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, மட்டும் பேசினால் குறிப்பிட்ட, பத்து நிமிடம் போதும்.ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுவது போல், அரசியல் ரீதியாக, "மத்திய அரசு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை' என, அக்கூட்டத்தில் பேசுவதென்றால் நேரம் போதாது தானே...

ஒவ்வொரு முதல்வரும், "தமிழக முதல்வரைப் போல நாங்களும் பேசுவோம்' என ஆரம்பித் தால், எவ்வளவு நேரமாகியிருக்கும் என்பதை, எண்ணிப் பார்க்க வேண்டாமா?எனவே, "தமிழகத்திற்கு அவமானம் நேர்ந்து விட்டது' என, ஜெயலலிதா கூறுவது, மிகைப்படுத்தப் படுவது தவிர, உண்மையான குற்றச்சாட்டு அல்ல. அவமானம், யாரால் என்பது தான் முக்கியமான கேள்வி.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
02-ஜன-201311:57:07 IST Report Abuse
MOHAMED GANI மின் பற்றாக்குறைக்கு கருணாநிதான் காரணம் என்று திரும்பத் திரும்ப கூறிவருகிறார். தி.மு.க ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட மின் திட்டங்களை அ.தி.மு.க அரசு பதவியேற்றவுடனேயே செயல்படுத்தத் தொடங்கியிருந்தால் இப்போது இந்த அளவிற்கு மின்பற்றாக்குறை இருந்திருக்காது. அதேபோல கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்திலும் தமிழக அரசின் தாமத முடிவின் காரணமாகவே, அங்கு மின் உற்பத்தி தாமதமானது. இன்னும் சொல்லப்போனால், விரைவில் மின்பற்றாக்குறை தீரும் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதும், தி.மு.க ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களின் மூலம்தான் என்பதை மறுக்கமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
29-டிச-201215:32:18 IST Report Abuse
Sri Gugan இங்கு அம்மாவிற்கு அறிவுரை வழங்கும் கருத்துகள் வரவேற்கபடனும்.அதேநேரத்தில் கருணாவிற்கு வக்காலத்து வாங்குவதாக அறியபடகூடாது.
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
29-டிச-201215:19:26 IST Report Abuse
Shaikh Miyakkhan தமிழ் நாட்டிற்கு முக ஒரு காங்கிரசு செய்தி தொடர்பாளர் ஆகி விட்டார். ஏன்? என்றால் மத்திய அரசின் செயல்களுக்கு ஊடகம்களுக்கு இவரல்லவா விளக்கம் அளிக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
29-டிச-201214:49:02 IST Report Abuse
Sahayam நியாயமான பதில். நமக்கு ஒரு நியாயம் சென்ட்ரலுக்கு ஓர் நியாயம் பார்க்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
29-டிச-201214:40:19 IST Report Abuse
R.Saminathan தி.மு.க. தலைவர் திரு.கலைஞர் அவர்கள் ஏன் இப்படி பல்டி அடித்து பேசுகிறார்...அப்போ இவர் அன்னாடும் கருத்து சொல்ல்வது அரசியலுக்கான கருத்து கிடையாது..இவர் சுயநலத்துக்காக பேசுகிறார்.., திமுக.தொண்டர்கள் பல வேதனைகளை அடைந்திருப்பார்கள் இவர் கருத்தாலே..,
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
29-டிச-201214:09:10 IST Report Abuse
Ravichandran பொய்யர்களின் தலைவர் நீர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மணி அடித்து உட்கார வைப்பது என்பது சரியான நாகரீக நடைமுறை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
29-டிச-201214:06:33 IST Report Abuse
Natarajan Ramasamy இந்த நாள் வரையில் நடந்த கூட்டங்களில் வாயை பொத்திக்கொண்டு இருந்தவர் யார்? உமக்கு ஆங்கிலத்தில் 10 நிமிடம் பேசுவதே கடினம். ஹிந்தியில் எனவே 10 நிமிடமே அதிகம். Like some of the meetings,this was not a eating meeting. காங்கிரஸ் முதல்வர்கள் பேசவேண்டியதில்லை. ஏன் எனில் அவர்கள் தேவைகள் கேட்காமலேயே கிடைக்கும்.காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சி முதல்வர்கள் முட்டிக்கொண்டலும் மண்டியிடதவரை மதிய அரசு செவி சாய்பதில்லை என்பதே தான் தமிழக முதல்வர் ஆணித்தரமாக எடுத்துக்காட்டியுள்ளார். 2G அலைவரிசை பற்றி முதலவர் டைம்ஸ் தொலைக்கட்சியில் கொடுத்த பெட்டிக்கு பின் விளைவுகள் யாவரும் அறிவர்..அவருடைய ஆணித்தரமான பேட்டியால் NDC PM பற்றி பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.. PM விழித்துக்கொண்டால் நல்லது. ஊழல் மன்னர்களுக்கு ஜால்றாவைதவிழ வேறு வழி? கூட்டாட்சியா அல்லது காட்டு தர்பாரா? .
Rate this:
Share this comment
Cancel
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-டிச-201212:35:43 IST Report Abuse
mangaidaasan ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்பார்கள். அது கருணாவுக்கு கைவந்த கலை. தமிழன், தமிழ்நாடு கெட்டு போனதற்கு கருணா, மற்றும் குடும்பம்தான் காரணம் என்பது உலகறிந்த செய்தி. மற்றும் தமிழகத்தில் ஜாதி புரையோடி கிடப்பதற்கும் இந்த கருணாவே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்கள் தம்மை ஆட்சியிலிருந்து துரத்தி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் அசிங்கப்படுத்தி விட்டார்களே என்பதால்தான் மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
29-டிச-201210:22:49 IST Report Abuse
T.Indran தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேச 10 நிமிடம் போதும் என்று, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் தானை தலைவர். 5 தடவை முதல்வராக இருந்த போதெல்லாம் சில நிமிடம் படித்து விட்டு வந்து விடுவாராம். இப்போதான் தான் தெரிகிறது, தமிழ்நாடு ஏன் உறுப்பாடாமல் போச்சு என்று. ஜெயலலிதா அம்மையாரின் பேச்சை அனுமதிக்க கூடாது என்று முன் கூட்டியே இவர் தான் எடுபிடிகள் மூலம் வேண்டியிருப்பார். இவரது பேச்சு, அரசியல், செயல் பாடு, எழுத்து அத்தனையும் விசமத்தனமாணவை இவரது ஒவ்வொரு அன்றாட நடவடிக்கையிலும் இதை நாம் காண முடிகிறது. இவருக்கு ஒப்பான கெடுமதியாளர்கள் இருக்கிறார்களா என்று தேடி பார்த்தால் இரண்டு பேர் நினைவுக்கு வருகிறார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவர் முன்பே இறந்து விட்டார், மற்றொருவர் இன்னும் பிறக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
Antony Jerome - chennai,இந்தியா
29-டிச-201210:11:33 IST Report Abuse
Antony Jerome To all hho did read this news it is 10.mins and not ten hours, so what you are saying is not fair JJ is not going to talk about for her personal welfare it about the welfare of the People of Tamil Nadu. More over this NDA is the place where they discuss the futre of India and each state has its own rights to present it before if these big guys have no time for this then let the Rulling Congress stop these kind of meetings it is mere waste but one thing is sure till year2015 we people of tamil nadu is not going to benifit any thing from the Central Govt. and with the support DMK the congress govt. is not going to give any any developments for Tamil Nadu I doubt if the power from Kudunukullam will we benift of it or will the kerala benfit let us wait and see.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை