Advertisement
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ., கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,23:39 IST

சென்னை:"உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இயங்குமானால், மாநில உரிமைகளை பறிக்கும் நிலை ஏற்படும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெ., எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்கும் முயற்சிகளில், மத்திய அர” மீண்டும் ஈடுபட்டு உள்ளது.இந்த ஆண்டு, மே மாதத்தில், உங்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், நான் உட்பட பல மாநில முதல்வர்கள், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு, எல்லா மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில், மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து பணி செய்வதே சரியானதாகும்.இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இயங்குமானால், மாநில உரிமைகளை பறிக்கும் நிலை ஏற்படும். இதனால்தான், காங்., ஆளும் மாநில முதல்வர்களே, இதை ஏற்க மறுத்துள்ளனர்.

மாநிலங்களில் உள்ள, தீவிரவாத தடுப்பு தகவல் பரிமாற்ற மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. உள்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட தவறான ஆலோசனையால், தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மாநிலத்தில் நடக்கும் விஷயங்கள், அந்த மாநில முதல்வர்களுக்கு தான் தெரியும்; ஏற்கனவே நடந்த கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு, உரிய முக்கியத்துவம் அளித்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்.மத்திய அரசு அமைக்கும் தீவிரவாத தடுப்பு மையம், மாநில அளவில், தகவல்களை பரிமாறிக் கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு மாநில போலீசாரை, தீவிரவாத தடுப்பு பணியை செய்ய அனுமதிப்பது சிறந்தது.

இதற்காக, தீவிரவாத தடுப்பு அதிரடி படையை, ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கலாம். தொலைத்தொடர்பு மற்றும் ஆயுதங்களை நவீனப்படுத்த, மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இந்த கருத்துகளை, ஏற்கனவே நடந்த கூட்டத்தில் தெரிவித்து உள்ளேன்.தேசிய அளவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் போது, அது தொடர்பான வரைவு அறிக்கையை, மாநில முதல்வர்களுக்கு தர வேண்டும். மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்த பின், இறுதி முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (18)
kochadaiyan - ,இந்தியா
29-டிச-201217:42:01 IST Report Abuse
kochadaiyan சென்னைக்கு வந்தோமா கடிதத்தை எழுதினோமா என்பதை விட்டு விட்டு சும்மா கூட்டத்தில் பாதியில் வெளிநடப்பு செய்வதும் குறை சொல்வதும் திசை திருப்புவதும் இதெல்லாம்
Rate this:
3 members
0 members
10 members
Share this comment
Sahayam - cHENNAI,இந்தியா
29-டிச-201214:55:34 IST Report Abuse
Sahayam இது ஒரு தேவையான திட்டம். அம்மா எதிர்ப்பது சரியல்ல
Rate this:
2 members
0 members
10 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-டிச-201209:13:17 IST Report Abuse
villupuram jeevithan இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு முதல்வர் என்று நினைக்கிறது மத்திய அரசு. எழுதினோமா, பிரதமரின் குப்பைக் கூடையை நிரப்பினோமா என்றல்லவா இருக்க வேண்டும்? இதெற்கெல்லாம் நேரா வந்து கொள்ளையடிக்கும் நேரத்தை வீணடிக்ககூடாது.
Rate this:
9 members
0 members
11 members
Share this comment
Ding Tong - Thiruchy,இந்தியா
29-டிச-201209:08:18 IST Report Abuse
Ding Tong நீ சொல்லுறத அவன் கேட்கமாட்டான் அவன் சொல்லுறத நீ கேட்கமாட்ட இப்படியே சண்ட போட்டே 2 வருஷம் ஓடிபோச்சு. ஓட்டு போட்டவனுக்காக எதாவது பண்ணினால் நன்றாக இருக்கும்.
Rate this:
3 members
0 members
29 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-டிச-201212:24:20 IST Report Abuse
மதுரை விருமாண்டிஓட்டுப் போட்டது உங்க தப்பா, இல்லை அவங்க தப்பா ??...
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
thirumalai chari - chennai,இந்தியா
29-டிச-201208:36:55 IST Report Abuse
thirumalai chari யாருக்காக இந்த அமைப்பு. இன்றைய சூழலில் தீவிரவாதிகளால் பொது மக்களுக்கு எந்தவிட ஆபத்தும் இல்லை.
Rate this:
5 members
0 members
9 members
Share this comment
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
29-டிச-201208:08:05 IST Report Abuse
naagai jagathratchagan போராடுவோம்... வெற்றி பெறுவோம்.... வெற்றி பெறும் வரை போராடுவோம் ..ஆனாலும் மாநில அரசு சொல்லுவதை எல்லாம் மத்திய அரசு யோசனை செய்யுமா ...கடந்த சில நிகழ்வுகளை பார்க்கும் பொது மாநில அரசு ...மத்திய சர்க்காருடன் சுமூகமான போக்குடன் இருக்குமென தெரியவில்லை ...எனினும் இப்போக்கு தேர்தலின் பொது தெரியும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-டிச-201205:40:40 IST Report Abuse
Baskaran Kasimani தீவிரவாதத்தை ஒடுக்க மாநில அரசால் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. ஒருங்கிணைத்த நடவடிக்கை இருக்க வேண்டும். உள்த்துறை மற்றும் ரானும் இதில் கோலோச்சவேண்டும்.
Rate this:
1 members
0 members
24 members
Share this comment
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
29-டிச-201203:39:07 IST Report Abuse
Sekar Sekaran தமிழக முதல்வரின் கடிதத்தின் சாராம்சம் தேவையே இல்லாதது..இப்படிக்கு "கருணா". கொத்தடிமை கருணா தேர்ந்தெடுத்ததின் பலன் இது. எதற்கு நமக்கு சிரமம்..மத்திய அரசாங்கமே பார்த்துகொல்லும்போது நமக்கு எதற்கு வீண் சிரமம்..என்பார்..ஒவ்வோர் விஷயத்திலும் மாநில உரிமைகளை பறிக்கும் செயலை இபோதைக்கு ஆதரித்தால்..போலீஸ் நிலையம் கூட மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்..அப்புறம் கிரானெட்..செம்மண் திருட்டுக்கள் தாராளமாய் நடந்தேறும்..என்பதால் மத்திய அரசாங்கத்தின் "இப்போதைய" இந்த முயற்சிக்கு நிச்சயம் கருணா குரல் கொடுப்பார். தமிழகத்தின் உண்மையான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் அம்மாவை தவிர யாருக்கு உண்டு? கேட்டால் மோதல் போக்கு இல்லாமல் சாதிக்க வேண்டும் என்பார்கள்..காவிரி பிரச்சினையில் எவ்ளோ வருடங்கள்..முல்லைபெரியாறு விஷயத்தில்...இன்னமும் வரப்போகின்ற பாலாறு விஷயத்திலும் நம்மை சதி செய்து கொடுமை செய்யும் மத்திய அரசும்...அதற்கு துணைபோகும் "கருணாவையும்" நாம் அடியோடு ஒழிக்காவிட்டால்..பாலைவனமாகும் நம் வாழ்க்கை...தமிழகம்..இத்தாலிக்கு அடிமைப்பட்டு போகவிடுவதா? யோசிக்கும் தருணமிது..
Rate this:
8 members
0 members
7 members
Share this comment
sivasankaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201200:24:22 IST Report Abuse
sivasankaranநல்ல பதிவு. சரி தன் பையை நிரப்பும் இந்த மஞ்சள் துண்டை மக்கள் உணரும் காலம் எப்போது வரும்...??????...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
29-டிச-201203:31:57 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை தமிழ்நாட்டுல ஹாரன் அடிச்சுகிட்டே வண்டி ஓட்டுற சத்தம் பக்கத்து கிரகம் வரைக்கும் கேக்குது , ஹாரன் அடிக்கிறது தீவிரவாத செயல்ன்னு சொல்லி ஹாரன் அடிக்குறவங்கள தீவிரவாத தடுப்பு மையத்துக்கு அனுப்ப அம்மா தான் ஏற்பாடு செய்யணும்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Jai - ,கனடா
29-டிச-201201:23:31 IST Report Abuse
Jai மீண்டும் மீண்டும் திரு முகவின் ஆலோசனை படி நடக்கும், மதிய அரசு தமிழர்களின் உரிமைகளை பறித்தாலும், தமிழ் உரிமைக்கு அயாரது குரல் கொடுப்பது அம்மாதான் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.
Rate this:
37 members
0 members
21 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.