ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சபாபதி சுவாமிக்கு, ஒன்பது அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், நேற்று காலை மாணிக்கவாசகர் தங்க பல்லக்கில் புறப்பாடாகி, சபாபதி சன்னதியில் எழுந்தருளினார். 21 திருவெண்பாவை பாடல்கள் பாடிய பின், சபாபதி சுவாமி, சிவகாமசுந்தரி அம்மனுக்கு பால், பஞ்சமிர்தம், விபூதி, மாவு பொடி, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட ஒன்பது அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் தங்க கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். பின்னர் சபாபதி, சிவகாமசுந்தரி தங்க பல்லக்கில் வீதி உலா வந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.