Arab shakes Victim of Indian women | அரபு ஷேக்குகளின் "ஷோக்'கிற்கு பலியாகும் இந்திய பெண்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரபு ஷேக்குகளின் "ஷோக்'கிற்கு பலியாகும் இந்திய பெண்கள்

Added : டிச 29, 2012 | கருத்துகள் (48)
Advertisement

மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர்.


வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், "மிட் - டே' என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.


அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:இந்தியாவிற்கு சுற்றுலா, "விசா'வில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும், பெண் தேடும் படலத்தை துவக்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள ஏஜண்டுகள், அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு, பெண்களை கூட்டி செல்கின்றனர். பிடித்தமான பெண்களை, ஷேக்குகள் தேர்ந்தெடுக்கின்றனர்.


"எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும்' என, விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன், திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை, முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன், 15 ஆயிரம், முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, பணம் பேசப் பட்டு, பெண்ணுக்கு கைமாறி விடுகிறது.


மேலும், எத்தனை நாட்களுக்கு, ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பிறகு, ஷேக்கின் மனைவியாக, இந்திய பெண் மாறுகிறாள்.
அந்த அப்பாவி பெண்ணுடன், இந்தியாவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை, தன் காம இச்சைக்கு, விருப்பம் போல பயன்படுத்துகிறார்.


சடீவிசா காலம், ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது, திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து, விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும், சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும், அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண், கசக்கி வீசப்படுகிறாள்.இதில் கொடுமை என்னவென்றால், அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு, அவள் பெறும் பணத்தில், கொஞ்சமே கிடைக்கிறது.


50 சதவீத பணத்தை, திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதம் உள்ளதை, பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.இந்த கொடுமை, மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது. இதை கண்டுகொள்வார் யாருமில்லை.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mniaz - Tamil Nadu,இந்தியா
31-டிச-201216:24:51 IST Report Abuse
mniaz Indian goverment and concerned authorities should take approapriate action to prohibit such activities in our country. What is the point in blaming a foreigner ? Are we (Indian) able to take care of own country women & provide them safety.. ? No Are we able to stop prostitution and related activities in our country..? No All the agents and parties facilitating such crime are actually supporting the foreigners who want to fulfill their desires. Inside our country itself there are Indian people who are doing such activities., we must stop all this.
Rate this:
Share this comment
Cancel
Deen Kb - Jeddah,சவுதி அரேபியா
31-டிச-201216:04:22 IST Report Abuse
Deen Kb ஊசிஏன் இடம்கொடுத்தது
Rate this:
Share this comment
Cancel
Eswaran - Palani,இந்தியா
31-டிச-201212:58:16 IST Report Abuse
Eswaran இது ரொம்ப நாளா நடக்குது.
Rate this:
Share this comment
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
31-டிச-201212:57:35 IST Report Abuse
tamilaa thamila இதில் மினரிட்டி மெஜாரிட்டி எங்கு வந்தது அன்பரே. ஏழ்மையில் வாடும் பெண்ணை பெற்றோர் இருக்கும் வரை இது போன்ற பாவ காரியங்களும் , குழந்தைகளை தத்து கொடுக்கும் வியாபாரமும் , கிட்னி விற்கும் வியாபாரமும் இருந்து கொடுத்தான் இருக்கும். இதற்கு, மதம், இனம், நாடு, சாதி எல்லாம் தடை இல்லை. இதனை தடுக்க அரசியல் வாதிகளும் சமுதாய அமைப்புகளும் உண்மையாக பாடு பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
31-டிச-201212:08:13 IST Report Abuse
Raja Singh இந்திய அரசாங்கம் தெரிந்த ஒன்றை அரசியலாக்கிவிட்டீர்கள், மறு மக்கள் புரட்சி கலந்த எழுச்சி எழுமுன் செயல்படுங்கள் பணம் வாங்காமல் வாக்களித்த சிலருக்காகவாது ...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201211:56:08 IST Report Abuse
Ramesh Rayen Shame on the sheikhs and religious priests who are supporting this for the sake of money. They put their divine religion into shame
Rate this:
Share this comment
Cancel
G.Sundararaman - kumbakonam,இந்தியா
31-டிச-201211:25:39 IST Report Abuse
G.Sundararaman வறுமை எனும் கொடுமை தொடரும் ஜனநாயகத்தில் ,உடலை விற்கும் விஷயம் புதுமை அல்ல , குறுக்கு வழியில் சம்பாதிக்க என்னும் எண்ணமே மேலோங்கி நிற்கும் காலம் இது. அதை பயன்படுத்திக்கொள்ளும் பிணந்தின்னிகள் ,அந்த பிணந்தின்னிகளின் பணத்தை பயன்படுத்திக்கொள்ளும் குடிமக்கள்கள் இருக்கும்வரை இது போன்ற கொடுமைகளை பார்த்து இது போல் விமர்சனங்கள் மட்டுமே செய்ய இயலும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன். வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Malleeswaran - Dindigul,இந்தியா
31-டிச-201208:33:27 IST Report Abuse
Malleeswaran இந்த விஷயம் காலம்காலமாக நடக்கிறது . இது நமது அரசுத் துறைக்கு தெரியாதா என்ன? எல்லாம் சிறுபான்மை ஓட்டுக்காகத்தான் இதை கண்டு கொள்வதில்லை .இதை நேர்மையான இஸ்லாமியர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள் . ஆனால்,நம்ம அரசியல் வாதிகள்தான் தீவரவாதிகள்,கொலை காரர்கள் இவர்களை எல்லாம் அந்த மதம் சார்ந்த பிரதிநிதிகளாகவே நினைத்து உண்மையான நேர்மையான சிறுபான்மையினரையும் அவமானப் படுத்துகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
30-டிச-201211:01:31 IST Report Abuse
ravi ramanujam r அரசாங்கம் இதனை தடுக்கும் பொருட்டு கடுமையான சட்ட திருந்தங்கள் கொண்டு வராத வரை இது போன்ற கொடுமைகள் அரங்கேறிகொண்டு தான் இருக்கும். ப்ரோக்கர்களை கம்பி எண்ண வைத்தாலே குற்றங்கள் குறைய வைப்புகள் உண்டு. செய்யும்மா மத்திய அரசு?
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
30-டிச-201208:41:15 IST Report Abuse
Rajesh இதற்கு பெயர் தான் legal prostitution. நமது இந்திய அரசாங்கம் கடுமையான சட்டங்களை செயல் படுத்தவேண்டும். இன்னும் எத்தனை காலம் தான் இது போன்ற கொடுமைகளை நாம் கேள்விப்படுவோமோ தெரியவில்லை. வெள்ளையர்கள், சுல்தான்கள், இப்பொழுது நம் அரசியல்வாதிகள் கையில் நம் இந்தியா சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஜனத்தொகை, சமுதாய சீரழிவுகள், சுகாதார சீர்கேடுகள், மது, இலவசங்கள், எங்கு தான் போகுமோ இந்த மனித இனம் தெரியவில்லை. இந்த கட்டுரையை படிக்கும் பொது ஒரு மதத்தின் மீதும் அதன் கோட்பாடுகள் மீதும், பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. தயவு செய்து இஸ்லாமிய சகதரர்கள் இந்த கருத்தை தவறாக புரிந்து கொள்ளகூடாது. இதற்கு எல்லாம் பணத்தாசை, ஏழ்மை மட்டும் தான் காரணம் வேறென்ன சொல்ல. இந்திய இளைஞர்கள் இந்த கொடுமைக்கும் வீதிக்கு வந்து போராடவேண்டும். டெல்லியில் நடந்தது வன்கொடுமை என்றால் இதை என்னவென்று சொல்ல. ஒரு நாட்டில் பெண்களை மதித்து அவர்களை போற்றினால்தான் நாடும், வீடும் சுபிட்சமாக இருக்கும். பெண்களை மதிப்போம், நமது இறையாண்மையை காப்பாற்றுவோம். முடிவாக நமது தாயும், மனைவியும், சகோதரியும், மகளும் ஒரு பெண்தான். தயவு செய்து பெண்ணினத்தை போற்றுவோம், மரியாதையாக நடத்துவோம், நம் வாழ்வு வளம் பெரும். இந்து புத்தாண்டில் இதை சபதமாக ஏற்று வாழ்வில் வளம் பெறுவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை