கூடலூர்: முதுமலையில், சிகிச்சை பெற்று வரும் குட்டி யானை ரங்காவுக்கு, இடது முன் காலிலும் கட்டு போட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு குட்டி யானை ரங்காவுக்கு, முன்னங்கால்களில், எலும்பு முறிவு ஏற்பட்டதால், கடந்த, 21ம் தேதி, வலது முன் காலில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று, கால்நடை மருத்துவ குழுவினர், குட்டி யானை ரங்காவை திரும்பி படுக்க வைத்து, இடது முன் காலில், பி.வி.சி., பைப்புகளை பயன்படுத்தி கட்டு போட்டனர். "இரு கால்களுக்கும், வரும், 21 நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது; யானை உணவு உட்கொள்வதில் எவ்வித பிரச்னையும் இல்லை. உடலும் நல்ல நிலையில் உள்ளது' என, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.