பாட்னா:பீகார், மிருககாட்சி சாலையில் பராமரிக்கப்படும் விலங்குகளை, குளிர் பாதிப்பிலிருந்து காக்க, அவற்றிற்கு, "ச்யவனப்ராச' லேகியம், தேன், கரும்பு போன்றவை வழங்கப்படுகின்றன.
சாலையோரங்களிலும், குடிசை பகுதிகளிலும் வசிக்கும் ஏராளமானோர், குளிரில் நடுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு, ஏராளமான வசதிகள் செய்யப்படுவது, ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள, மிருககாட்சி சாலையில் விலங்குகள், குளிரால் பாதிக்கப்படாமல் இருக்க, ஏராளமான வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிம்பன்சி குரங்குகளுக்கு, குளிரை தாக்கு பிடிக்க தேவையான, நோய் எதிர்ப்பு சக்திக்காக, "ச்யவனப்ராச' லேகியம், தேன், கரும்பு போன்றவை வழங்கப்படுகின்றன.
மிருகங்களுக்கு வெதுவெதுப்பூட்ட, 500 வாட், மின்சார பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. குளிர் நேராக தாக்காமல் இருக்க, குளிர் தடுப்புகள், கூடுதல் வெப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில், சூரிய வெளிச்சம் அதிகமாக படும் வகையில், தடுப்புகள் நீக்கப்பட்டு, மாலை நேரங்களில் மூடப்படுகின்றன.இவ்வாறு, ஏராளமான ஏற்பாடுகளில், பாட்னா மிருக காட்சி சாலை விலங்குகள், குளிரை தாக்கு பிடித்து, சுகமாக வாழ்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.