உத்தமபாளையம்: அலங்கார, ஆடம்பர விளக்குகள் பயன்பாட்டிற்கு மின்வாரியம் தடை விதித்துள்ள நிலையில், மின் திருட்டை தடுக்கும் விதமாக தகவல் தெரிவிக்க, இலவச அழைப்பு டெலிபோன் நம்பர் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறையால்,தினமும் 14 முதல் 18 மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மொத்த தேவையான 12 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரத்தில், பற்றாக்குறையாக உள்ள மின்சாரத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், கடந்த 2 வாரங்களாக திறக்கப்பட்டு வருகின்றன. அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இந்த நிறுவனங்களுக்கு மின்சாரத்தை எவ்வழியிலும் வழங்கியே ஆக வேண்டும். இதனால், தற்போது ஏற்கனவே தேவைப்பட்ட அளவைவிட 0.92 சதவீதம் மின்சாரம் அதிகமாக
நுகரப்பட்டு வருகிறது. இந்த கூடுதல் நுகர்வு, வீட்டு இணைப்புகளின் மின்சாரத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. மின்தட்டுப்பாட்டை முற்றிலும் போக்க, அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முற்பாட்டாலும், அது நீண்ட காலத்திற்கு பிறகே பயனளிக்கும் திட்டங்களாக உள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் மின்சிக்கனத்தை கøட்பபிடிக்க முடிவு செய்யப்பட்டு, நுகரப்படும் மின்சாரத்தின் அளவை எந்தெந்த வழிகளில் குறைக்கலாம், என்பது குறித்து அரசிற்கு மின்வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, விழாக் காலங்கள், பண்டிகைகள், நட்சத்திர ஓட்டல்கள், அரசு விழாக்கள், மாநாடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் அலங்கார, ஆடம்பர விளக்குகளுக்கு இனி தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர, மின்சாரம் திருடப்படுவதை கண்காணிக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தனி அமைப்பு ஏற்படுத்தவும், இதுகுறித்த புகார்களை தெரிவிப்பதற்கு, இலவச அழைப்பு எண்ணும், விரைவில் வழங்கப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்கள் சம்பளம், பென்ஷன், வாழ்நாள் உதவி பெறுவார்கள், மின்சாரம் திருடுபவர்களிடம் நாங்கள் உதை வாங்க வேண்டுமாம்? இதற்க்கு ஒரு எண் தருகிறார்கள், தேவையா எங்களுக்கு? உங்களுக்கு எதுவுமே தெரியாதா? தான் வாழ பிறரைக் கெடுக்காதே என்று பல ஆட்டோக்களில் எழுதியதை நான் பார்த்திருக்கிறேன் அனால் அதே ஒரு செய்தியாக தற்போது படிக்கிறேன், வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.