புதுடில்லி:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை ஏமாற்றி, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஆந்திராவைச் சேர்ந்தவர் மீது, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சி.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர், தேஜோ பாஸ்கர் யளவர்த்தி. இவர், ஐ.ஓ.பி.,யிடமிருந்து, இரண்டு, "டெபிட்' கார்டுகளை பெற்றார்.
தன் வங்கி கணக்கில், போதிய அளவில் பணம் இல்லாதபோதும், இந்த கார்டுகளை பயன்படுத்தி, 3,000க்கும் மேற்பட்ட பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.இந்த கார்டுகள் மூலம், ஏராளமான ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, வர்த்தக நிறுவனங்களிடமிருந்து, இந்த பொருட்களை, "டெபிட்' கார்டுகள் மூலம், வாங்கியுள்ளார்.
இதுகுறித்து, சென்னை, ஐ.ஓ.பி., மத்திய அலுவலகம் சார்பில், புகார் செய்யப்பட்டது. விசாரணையில், தேஜோ பாஸ்கர், வேறு சிலருடன் சேர்ந்து, இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டது, கண்டுபிடிக்கப்பட்டது.ஒட்டு மொத்தமாக, மூன்று கோடி ரூபாய் அளவுக்கு, அவர் மோசடி செய்துள்ளார். தோஜோ பாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், விலை உயர்ந்த, பல ஆடம்பர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, விஜயவாடா கோர்ட்டில், குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, சி.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.