திண்டுக்கல்: மல வாய் மூடிப்பிறந்த பெண் குழந்தைக்கு, திண்டுக்கல் டாக்டர்கள் ஆப்பரேஷன் செய்து சரி செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் மனைவி பானுப்பிரியா, 19; சில நாட்களுக்கு முன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. மலவாய் மூடி, குழாய் வெளியில் வரவில்லை. மலவாயை திறந்து, குழாயை வெளியே கொண்டு வரும் முயற்சியில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன், டாக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். நேற்று, ஆப்பரேஷன் மூலம் மலவாய் திறக்கப்பட்டது.
கண்காணிப்பாளர் கூறியது: குழந்தைகள் கருவில் வளர்ச்சி அடையும் போதே நீர்பையும், மலக்குழாயும் இணைந்து வளர வேண்டும். ஆனால், நீர் பை வளர்ந்துள்ளது; மலக்குழாய் வளர்ச்சியற்று மூடப்பட்டும், பிறப்பு உறுப்பில் இணைந்தும்
இருந்தது. இதை தனித்தனியாக பிரித்துள்ளோம். நூற்றில் ஒரு குழந்தைக்கு, இப்பிரச்னை ஏற்படும். இக்குழந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின், மற்றொரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.