சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில், சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 4ம் தேதிக்கு, ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர், பி.வெங்கடசுப்ரமணியன், தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில், 13 வயது, பள்ளி சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
போலீசார் வழக்குப் பதிவு செய்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு, ஊடகங்கள், முக்கியத்துவம் அளிக்கவில்லை; ஆனால், டில்லி சம்பவத்துக்கு, முக்கியத்துவம் அளிக்கின்றன.
டில்லியில் நடந்த சம்பவம் குறித்து, டில்லி ஐகோர்ட், தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்து, உள்துறைச் செயலர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆஜராக உத்தரவிட்டது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில், சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும். இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை, புலன்விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் வெங்கட்ராமன், வாசுகி அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் வெங்கடேஷ், கூடுதல் அரசு பிளீடர் திவாகர், ""மனு, விசாரணைக்கு உகந்ததல்ல; ஏற்கக் கூடாது,'' என, வாதிட்டனர். மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 4ம் தேதிக்கு, கோர்ட் ஒத்திவைத்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.