திண்டிவனம்: புதுச்சேரி முன்னாள் அமைச்சர், கல்யாணசுந்தரம் மீதான வழக்கு விசாரணை, ஜன., 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர், கல்யாணசுந்தரம் மீது, 10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரசு தரப்பில், விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட, 57 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, நேற்று வழக்கு விசாரணை நடக்க இருந்தது. முதலாவது நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் சரிதா, நேற்று விடுமுறையில் இருந்ததால், இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டாவது கோர்ட் மாஜிஸ்திரேட் சந்தோஷ், நேற்று, செஞ்சி குற்றவியல் கோர்ட்டில் கூடுதல் பொறுப்பில் இருந்ததால், கல்யாணசுந்தரம் வழக்கு சம்பந்தப்பட்டவர்கள், செஞ்சி கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கை, வரும், ஜன., 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து, மாஜிஸ்திரேட் சந்தோஷ் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.