மதுரை: கிரானைட் குவாரி விதிமீறல் வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி, தினமும் போலீசில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்தியும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன பங்குதாரராக இருந்த தயாநிதி மீது, விதிமீறியதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவருக்கு, ஐகோர்ட் கிளை நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. தினமும், கீழவளவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். தயாநிதி, ""போலீசில் கையழுத்திட செல்லும்போது, காத்திருக்க வைக்கின்றனர். நேரம் விரயமாகிறது. முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும்,'' என, ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன், விசாரணைக்கு, மனு வந்தது. அரசு வக்கீல், ""பல ஆவணங்களை சேகரித்து வருகிறோம், இன்னும் விசாரணை துவங்கவில்லை,'' என, ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதி, ""போலீசில் ஜன.,7, 21, 28, பிப்.,4 ல், காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும்,'' என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.