மதுரை: "பிறந்த தேதியில் மாற்றம் செய்ய உத்தரவிடும் அதிகாரம் சிவில் கோர்ட்டிற்கு உண்டு. பெல் நிறுவன ஊழியரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி மணிவாசகம் தாக்கல் செய்த மனு: திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (பெல்) 1979 ல் எழுத்தராக பணியில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ்படி, பணிப் பதிவேட்டில் பிறந்தநாள் 1952 ஜூன் 5 என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான பிறந்தநாள் 1953 அக்.,29 என தெரிந்தது. இதை, பணிப்பதிவேட்டில் பதியும்படி, நிர்வாக இயக்குனரிடம் மனு அளித்தேன். திருச்சி கூடுதல் முன்சீப் கோர்ட்டில் மனு செய்தேன். கோர்ட்," விதிகள்படி பணியில் சேர்ந்த ஓராண்டிற்குள், பிறந்ததேதியில் மாற்றம் செய்யுமாறு, நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்கலாம். போதிய ஆவணங்கள் இருந்து, நிர்வாகத்திற்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில், மாற்றம் செய்யலாம்,' எனக்கூறி கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு செய்தேன். தனிநீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். பிறந்த தேதியில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் உத்தரவு: பிறந்த தேதியில் மாற்றம் செய்ய உத்தரவிடும் அதிகாரம், சிவில் கோர்ட்டிற்கு உண்டு. சிவில் கோர்ட் உத்தரவு மனுதாரருக்கு எதிராக உள்ளது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.