Advertisement
போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் மோசடி : வங்கி அதிகாரி உட்பட ஏழு பேருக்கு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

சென்னை: போலி ஆவணங்களுக்கு கடன் வழங்கி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி அதிகாரி உட்பட, ஏழு பேருக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், சிறை தண்டனை வழங்கியது. தி.நகர் பகுதி, தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள, இந்தியன் வங்கியின் மேலாளராக இருந்தவர் ஜெயபாலன். இவர், 2005ல், இடைத்தரகர்களுடன் கூட்டு சதி செய்து, போலி ஆவணங்கள் தயாரித்தார். மேலும், அதிகார துஷ்பிரயோகம் செய்து, அந்த நபர்களுக்கு, தொழில் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, வங்கி மூலம், பல லட்சம் ரூபாய் வரை கடனுதவி செய்தார். இதனால் வங்கிக்கு, ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஜெயபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பு வழக்கறிஞராக இப்ராஹிம் ஆஜரானார். இந்த வழக்கில், நீதிபதி சித்தார்த்தர், பல்வேறு பிரிவுகளில், ஜெயபாலனுக்கு, மூன்று ஆண்டு சிறை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த, ஆறு பேருக்கு, தலா, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-டிச-201214:33:21 IST Report Abuse
மதுரை விருமாண்டி அம்புட்டுத் தானா ?? கோடிகளில் கொள்ளை,.. தண்டனை வெறும் மூன்றாண்டும், ஓராண்டும் தானா ?? தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை பறி கொடுத்தவன், வாழ்நாளெல்லாம் பரிதவிக்க, இந்த பாவிகள் கொள்ளை அடித்த பணத்தை சிறைக்கு சென்று வெளியே வந்து அனுபவிக்கவா இந்த சட்டமும், கண்றாவியும் ?? என்ன கொடுமை சார் இது...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.