கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைக்கு நடவடிக்கை: சோனியா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, மிக விரைவில், தண்டனை கிடைப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், '' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டதன், 128வது நிறுவன தினம், டில்லியில் உள்ள, அக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று நடந்தது. காங்., தலைவர் சோனியா, காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்ட, இந்த நாளில், நாட்டுக்காகவும், கட்சிக்காகவும், பாடுபட்ட தியாகிகளை, நினைவு கூற வேண்டியது அவசியம். இன்னும் சில நாட்களில், இந்தாண்டு முடிவடையவுள்ளது; புத்தாண்டு பிறக்கப் போகிறது.


வழக்கமாக, இதுபோன்ற நேரங்களில், ஒருவருக்கு ஒருவர், வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால், வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், உள்ளோம்.நம், நினைவுகள் முழுவதும், அந்த மாணவியைப் பற்றித் தான் உள்ளன. அந்த மாணவி, உயிருக்கு போராடுகிறார். அவர், பூரணமாக குணமடைய வேண்டும் என்பது தான், நம்முடைய ஒரே விருப்பம். கற்பழிப்பு சம்பவத்துக்கு காரணமான, குற்றவாளிகளை தண்டிப்பதில், எந்த கால தாமதமும் ஏற்படக் கூடாது.இவ்வாறு, தழு தழுத்த குரலில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், சோனியா பேசினார்.


இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிப்பதில், அரசு, உறுதியாக உள்ளது. அந்த மாணவிக்கு தேவையான, அனைத்து சிகிச்சைகளும், அரசு சார்பில் அளிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் குறித்து, விசாரிப்பதற்காக, குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு அளிக்கும் பரிந்துரை களின்படி, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள், கடுமையாக்கப்படும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.முன்னதாக, சோனியா தலைமையில், காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டமும் நடந்தது. இதில், மூத்த அமைச்சர்கள், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர், பங்கேற்றனர்.


அதிக அளவில் பெண் போலீஸ்:மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது:டில்லியில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தீவிர நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டில்லியில், பெண் போலீசாரை, அதிக அளவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டில்லி முழுவதும், சிறப்பு தேர்வு முகாம்கள் நடத்தப்படும்.


அதேபோல், டில்லியில் உள்ள, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், குறைந்தது, ஒரு பெண் போலீஸ் அதிகாரியாவது, இருக்கும்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.தலைநகர் டில்லியில், போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (43)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
30-டிச-201211:25:20 IST Report Abuse
ratthakatteri_modi மனிதர்களால் கற்பழிக்கபட்டிருந்தால் ஒரு வேலை உயிர் தப்பி இருக்கலாம், கொடூர மிருகங்களால் என் சகோதரி சின்னபின்னம்மாகிவிட்டால், எதற்கு இன்னும் தயக்கம், குற்றவாளிகளே தம் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு இன்னும் என் விசாரணை சம்பிரதாயங்கள். அந்த 6 கொடியமிருகங்களையும் உருத்தெரியாமல் அழித்திருக்க வேண்டாமா? அவர்களின் தண்டனை இதுபோன்ற செயல்களை செய்ய என்னும் அனைவருக்கும் ஒரு கிலியாக இருக்குமல்லவா... செய்யுமா இந்த அரசு?
Rate this:
Share this comment
Cancel
Jaya..student.. - thakkolam  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201208:44:07 IST Report Abuse
Jaya..student.. please KADUMAIYANA THANDANAI THARA VENDUM 6 animals ku please please please....pray to all people....I'm very very so sad....kanniudan Jaya.....
Rate this:
Share this comment
Cancel
simbu - melmaruvathur  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201208:38:02 IST Report Abuse
simbu இந்தி்ய கலாச்சார வளர்ச்சி மற்றும் மதுபான கடை வளர்ச்சி இவை இரண்டும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் ஆணோ பெண்ணோ பாலுணர்வை தூண்டும் விதத்தி்ல் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கலாச்சார பண்பாடுகளையும் தனி மனித ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்கு முதலில் பெற்றோர்கள கலாச்சார பண்போடு நடந்துக் கோள்ள வேண்டும் கற்பழிப்புக்கு எதி்ராக இத்தனை வன்முறை குணம்படைத்த மாணவர்களிண் போராட்டங்கள் எதை காட்டுகிறது இந்த வன்முறை குணம்தான் நாளாடைவில் பல தீய வன்முறைகளை செய்ய தூண்டுகிறது தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிக்கவில்லையெனில் இந்தி்ய நாட்டை எத்தனை கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் தி்ருத்த முடியாது பொதுவாக பாலுணர்வை தூண்டும் ஊடகங்கள் மற்றும் பத்தி்ரிக்கை நாளேடுகளை தடை செய்ய வேண்டும் அரைகுறை ஆடைகளோடு நடிக்கும் சினிமா நடிகைகளை தடை செய்ய வேண்டும் இந்தி்ய தி்ரைப்படங்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் கொண்டு வரவேண்டும் இவைகளை செய்யாமல் குற்றம் செய்பவனுக்கு தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறைய போவதி்ல்லை குற்றம் நடைபெற எவையெல்லாம் காரணங்களோ அவையெலலாம் தடை செய்யப்பட வேண்டும் டில்லி பெணகளுக்கு பாதுகாப்பு என்பதைவிட இந்தி்ய பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனபதுதான் சரி இப்போது கொண்டுவரப்போகும் சட்டம் நடுத்தர மற்றும் ஏழை குடிமகன்களுக்கு மட்டுமதான் என்பதி்லும் சந்தேகம் இல்லை ஏனென்றால் நமது இந்தி்ய சட்டம் ஓட்டைகள நிறைந்த சல்லடை போண்றது
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
30-டிச-201207:50:21 IST Report Abuse
Prabhakaran Shenoy விமானம் கடத்தியவனுக்கே பாராளுமன்ற தேர்தலில் நிற்க டிக்கெட் கொடுத்தவர்கள் இவர்கள். தவிர திவாரியின் நிலைமை இப்பொழுது என்ன? அதே கதிதான் இது போன்ற விசயத்திலும் .
Rate this:
Share this comment
Cancel
viju - Kuwait  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201201:27:12 IST Report Abuse
viju பாலியல் கொடுமைக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் முதலில் தண்டிக்க படுபவர்கள் அரசியல் வாதி்களும் அவர்களின் வாரிசுகளும்தான் ஆகவே சட்டத்தை இயற்றி ஆப்பை தேடி சொருகிகொள்ள விரும்புவார்களா
Rate this:
Share this comment
Cancel
cool - sg  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201201:11:11 IST Report Abuse
cool its called goverment careless. y they still let the guys arround in the world ?
Rate this:
Share this comment
Cancel
parakkirama pandian - Tenkasi,இந்தியா
30-டிச-201200:32:20 IST Report Abuse
parakkirama pandian அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடைய பிரார்தனை செய்கிறோம் .....
Rate this:
Share this comment
Cancel
M .Alexander - kurnool,இந்தியா
29-டிச-201218:09:14 IST Report Abuse
M .Alexander பொலிசார் சரியாக இருந்தால் ஏன் இந்த சம்பவங்கள் நடகின்றது பென்போலிசரும் பெண்களை சரியாக நடத்துவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Santhosh Kumar.P - Bahour, Pondicherry.  ( Posted via: Dinamalar Windows App )
29-டிச-201217:35:22 IST Report Abuse
Santhosh Kumar.P இது மக்களை ஏமாற்றுவதற்க்கு....... வேறும் கண்துடைப்பு......
Rate this:
Share this comment
Cancel
nana - channai  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201216:51:13 IST Report Abuse
nana nadu kattu posu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்