Ratan Tata has retired | ஓய்வு பெற்றார் ரத்தன் டாடா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓய்வு பெற்றார் ரத்தன் டாடா

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஓய்வு பெற்றார் ரத்தன் டாடா

மும்பை:பிரபல தொழில் அதிபர், ரத்தன் டாடா, டாடா குரூப் நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து, நேற்று ஓய்வு பெற்றார்.பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா. இவர், டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக, பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்திய தொழில் வளர்ச்சியில், இவரின் பங்கு, முக்கியமானது. சில ஆண்டுகளுக்கு முன், உலகின் மிக குறைந்த விலை காரான, "டாடா நானோ'கார்களை, இவரது நிறுவனம் தான், கார் சந்தையில், அறிமுகப்படுத்தியது.இவருக்கு, நேற்று, 75 வது பிறந்த நாள். இதையொட்டி, டாடா குரூப் நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து, நேற்றுடன் ஓய்வு பெற்றார். கடைசி நாளான நேற்று, புனேயில் உள்ள, டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு வந்த அவர், அங்குள்ள தொழிலாளர்களுடன், இயல்பாக பேசி, மகிழ்ந்தார்.
இதுகுறித்து, "டுவிட்டர்' சமூக வலைத் தளத்தில், அவர் கூறியுள்ளதாவது:பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், எங்களுடன், கணிசமான நேரத்தை செலவிட வேண்டும் என, தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வற்புறுத்தினர். இதனால், அவர்களுடன் நேரத்தை செலவிட்டேன்.ஊழியர்களுடனான சந்திப்பும், அவர்களின் வாழ்த்தும், எனக்குள் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தின. இந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என் தொழிலாளர்கள், தொழில் தர்மத்தின்படி பணியாற்ற வேண்டும் என்பதே, என் வேண்டுகோள்.இவ்வாறு, அதில், டாடா கூறியுள்ளார்.ரத்தன் டாடாவுக்கு பின், சைரஸ் மிஸ்ட்ரி, 44, டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக, இன்று பதவியேற்கவுள்ளர்.


கங்கை அமரன் சொத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? சிறப்பு கோர்ட்டில் சுதாகரன் பதில்பெங்களுரு:""தமிழக முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு, 7 கோடி ரூபாயா என்பது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது,'' என, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சுதாகரன் கூறினார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூன்றாவது நாளாக, நீதிபதி பாலகிருஷ்ணா கேட்ட கேள்விகளுக்கு, சுதாகரன் பதிலளித்தார். கடந்த இரண்டு நாட்களில், 322 கேள்விகள், நேற்று, 125 கேள்விகள் என, இதுவரை, 447 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.சுதாகரன் அளித்த பதில்:சென்னை தி.நகர், பத்மநாப நகரிலுள்ள கட்டடம், 20.34 லட்சம் ரூபாய், சென்னை ஸ்ரீராம் நகர், 80 அடி ரோட்டிலுள்ள கட்டடம், 20.57 லட்சம் ரூபாய், மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கட்டட மதிப்பு, 53.11 லட்சம் ரூபாய், சோளிங்கநல்லூர் கட்டடம், 80.37 லட்சம் ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், விசாரணை அதிகாரிகள், உண்மையான மதிப்பை விட அதிகமாக மதிப்பிட்டுள்ளனர். எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், அரசு அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போயஸ் கார்டன் வீட்டை, பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் ஆய்வு செய்து, அதன் மதிப்பு, 7 கோடியே, 93 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயித்தது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது.
மந்தை வெளி, புனித மேரி தெருவிலுள்ள பழைய வீட்டை, 18 ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து இடித்தது பற்றியும் தெரியாது. கோபால் புரமோட்டர்ஸ் கம்பெனியில், ஜெயலலிதா, சசிகலா, நான், இளவரசி ஆகியோர் இயக்குனர்கள்.இசை அமைப்பாளர் கங்கை அமரன் சொத்தை வாங்குவதற்கு, எங்கள் கம்பெனி இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எனக்கு தெரியாது.சென்னை, தி.நகரிலுள்ள சுப்புலட்சுமி கல்யாண மண்டபம் எங்களுக்குரியது. ரிவர்வே ஆக்ரோ புராடக்ஸ் நிறுவனத்துக்காக, பவர் ஏஜென்ட் சிவா மூலமாக, ஒன்பது இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டன. மெடோ பார்ம் கம்பெனிக்காக, ஐந்து இடங்களில் நிலம் வாங்கினோம்.


சசிகலா, நான், இளவரசி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள கொடநாடு டீ எஸ்டேட்டிலிருந்து, பங்குதாரராக உள்ள குணபூசணி, தான் விலகி கொள்வதாக, கனரா வங்கியில் கடிதம் கொடுத்தது உண்மை.மைலாப்பூர் கனரா வங்கியில், எனக்கு கணக்கு உள்ளது. எங்களின் நிறுவனங்களுக்காக வாங்கப்பட்ட சொத்துகளில், எனக்கு தனிப்பட்ட ஆர்வம் எதுவுமில்லை.இவ்வாறு நீதிபதியின் கேள்விகளுக்கு, சுதாகரன் தயக்கமின்றி ஆங்கிலத்தில் பதிலளித்தார்.கேள்விகள் முடிவடையாததால், இன்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satheesh kumar - New Delhi,இந்தியா
29-டிச-201221:49:32 IST Report Abuse
satheesh kumar sir hats-off to you sir..
Rate this:
Share this comment
Cancel
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-டிச-201217:13:11 IST Report Abuse
mangaidaasan இங்கும் ஒரு சிலர் இருக்கின்றனர். தலைவர் நாற்காலியை பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றனர். அவர்களுக்கு திரு.ரத்தன் டாட்டா அவர்கள் பாடம் எடுத்தால் நல்லது. அய்யோ வேண்டாம் வேண்டாம் பிறகு உங்கள் மூளையையும் சலவை செய்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-டிச-201208:18:18 IST Report Abuse
Lion Drsekar ஓர் அரசையே நடத்திவந்த முடிசூடா மன்னார் மிக மிக எளிமையாக ஓய்வு பெற்றுள்ளார், இங்கு அரசியலில் ஏதோ இவர்கள் முதல் போட்டு இந்த நாட்டையே விலைக்கு வாங்கியது போல், இவர்கள் இல்லை என்றால் இந்த நாடே அழிந்துபோகும் அளவிற்கு சென்று விடும் என்று தினம் தினம் செய்தியை அள்ளித் தெளிதவண்ணம், ஒரு கூட்டத்தையே தன்னிடம் வைத்துக்கொண்டு கொடுன்கொல்லாட்சி செய்து கொண்டு நல்ல உள்ளமும், மனித நேயமும் கொண்டவர்களைக் கொலைசெய்து கொண்டு, மக்களுக்குத் தொண்டற்றிக்கொண்டு வருகிறேன் என்று வாய் இளித்துக்கொண்டு போகும் நிலையிலும், பேசமுடியாமல், நடக்க முடியாமல் இருக்கும் நிலையிலும் ஓய்வு பெறாமல் நமக்காக உழைப்பதைப் பார்த்தால் மிக மிக பெருமையாக இருக்கிறது, அனால் பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்புத் தனது, அவர்களுடைய குடும்பங்களை மிக மிக சீரும் சிறப்பாக வாழவைத்து, தான் இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து ஓய்வு பெறுகிறேன் என்ற ஒரு செய்தியுடன் இந்த மிகப் பெரிய பொறுப்பிலிருந்து விடைபெறுகிறார் என்றால் இவரை இந்த உலகம் போற்றவேண்டும், ஒரு சிலை இல்லை, ஒரு மன்றம் இல்லை, ஒரு கழகம் இல்லை, ஒரு ரசிகர் மன்றம் இல்லை, ..வாழ்க ரத்தன் டாட்டா வந்தே மாதரம்
Rate this:
Share this comment
MURUGAN - monrovia,லைபீரியா
29-டிச-201213:24:55 IST Report Abuse
MURUGANYou are absolutely correct....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை