கோலாலம்பூர்:மலேசியாவில், கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மூன்று தமிழர்கள், போதிய ஆதாரமில்லாததால், இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.மலேசியாவின், கோலாலம்பூர் புறநகரான, புசோங் பகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு முன், சையத்குமார்,37 என்பவர் தலையில் காயம் பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தலையில் அடித்து, இவர் கொல்லப்பட்டதாக, செக்யூரிட்டியாக வேலை பார்த்த ஹரிதாஸ்,29; மாணவர் ஷண்முகம்,21; டெக்னீஷியன் சக்தி வேலு,23, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.""சையத் குமார், தலையில் அடிபட்டு, பத்து நாட்களுக்கு பின் இறந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்படவில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை. எனவே, மூன்று பேரை விடுவிக்க வேண்டும்,'' என, தமிழர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.இதையடுத்து மூன்று பேரையும் விடுவிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.