நியூயார்க்:ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்ததாக, விடுதலை புலிகள் இருவர், கனடா நாட்டிலிருந்து, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, 25 ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. 2009ல், பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு, சண்டை முடிவுக்கு வந்தது.பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த விடுதலை புலிகள், இலங்கைக்கு பண உதவியும், ஆயுத உதவியும் செய்து வந்தனர்.
கடந்த, 2004-2006க்கு, இடைப்பட்ட காலத்தில், விடுதலை புலிகளுக்கு, நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமானம் தயாரிப்பது தொடர்பான தொழில் நுட்ப உதவிகளை அளித்தது; ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த, பிரதீபன் நடராஜா, 36, சுரேஷ் ஸ்ரீகந்தராஜா, 32, மீது, அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கனடாவில் தங்கியிருந்த இவர்களை ஒப்படைக்க, அந்நாட்டு கோர்ட், முதலில் மறுத்து விட்டது. தற்போது இவர்களை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க, கனடா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இருவர் மீதான வழக்கு, புருக்ளின் கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், நடராஜாவுக்கு, 25 ஆண்டு, சிறை தண்டனை அல்லது ஆயுள் சிறை வழங்கப்படும். ஸ்ரீகந்தராஜாவுக்கு, 25 ஆண்டு, சிறை தண்டனை அளிக்கப்படலாம்.விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, பொட்டு அம்மனின், தலைமையில் கீழ் இவர்கள் இருவரும் செயல்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.